தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கோவில்பட்டி கிளை மாநாடு பால்வண்ணம் நினைவு நூலகத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு, கிளைத்தலைவர் அபிராமி முருகன் தலைமை தாங்கினார்.. கிளை உறுப்பினர் ரம்யா வரவேற்று பேசினார். ஆசிரியர் ஸ்ரீதர் அஞ்சலி தீர்மானம் நிகழ்த்தினார். மாநாட்டினை தொடக்கி வைத்து தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினரும், சாகித்ய பாலபுரஸ்கர் விருது பெற்ற எழுத்தாளருமான உதயசங்கர் பேசினார். கிளைச் செயலாளர் முத்துராஜ் வேலை அறிக்கையை முன்வைத்து பேசினார். வரவு செலவு அறிக்கையை கிளை நிர்வாகி முருகேஸ்வரி […]
கோவில்பட்டி வஉசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது, இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கல்வி அறக்கட்டளையின் சார்பில் நிறுவனத் தலைவர் ராஜா, செயலாளர் உதயா முத்துப்பாண்டியன், பொருளாளர் அசோக், நிர்வாகிகள் சக்தி சுப்பிரமணியன், ஜெயராஜ், ரவீந்திரன், பாதாள முத்து, பிரபு, செல்வம் ஆகியோர் ஏற்பாட்டில், இப்பள்ளியில் 2024 -25 ஆம் கல்வியாண்டில் 10,11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்கள், நினைவுப் […]
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து, சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப்பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 13-வது நாளாக போராட்டம் நீடித்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அனைவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.அப்போது போலீசாருடன் அவர்கள் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 700 பெண்கள் உள்பட 950 பேரை 30 மாநகர பஸ் மூலம் போலீசார் கைது செய்து […]
கோவில்பட்டி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன, காமராஜ் மெட்ரிக் பள்ளி கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. நாடார் உறவின்முறைச் சங்க உபதலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி ,தேசியக் கொடியினை ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக உபதலைவர் மற்றும் சங்க உறுப்பினர்கள் ராஜேந்திர பிரசாத், செல்வராஜ்,பள்ளிச் செயலாளர் வக்கீல் செல்வம் ஆகியோர் புறாக்களை பறக்கவிட்டனர். பள்ளிப் பொருளாளர் பாஸ்கரன்,பள்ளிக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார்,கண்ணன்,செல்வம்,பொன்ராமலிங்கம், […]
கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 79வது சுதந்திர தின விழா நடைபெற்றது. உடற்கல்வியியல் துறை மாணவர்கள் பிரமிடு வடிவில் தேசிய கொடியுடன் நின்று அசத்தினர். விழாவிற்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார், கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க பொருளாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஆர்.எஸ் ரமேஷ் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி பேசினார். […]
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 79வது சுதந்திர தின விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து புறாக்கள், வண்ண பலூன்களை பறக்க விட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 79பயனாளிகளுக்கு 5,49,39,919 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய […]
79-வது சுதந்திர தினம்: சென்னை கோட்டையில் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றி விருதுகள் வழங்கினார்
இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன, சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து காரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே இருந்து அவரை காரின் முன்னாலும், பின்னாலும் சென்னை காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வந்தனர்.கோட்டை கொத்தளத்தின் முன்பாக இருக்கும் […]
சுதந்திர தின விழா மற்றும் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் கோவில்பட்டியில் இன்று மாலை பாஜக சார்பில் தேசியக் கொடி ஊர்வலம் நடைபெற்றது. கோவில்பட்டி லெட்சுமி மில் மேம்பாலம் அருகே தொடங்கிய ஊர்வலம் மெயின் ரோடு, மாதாங்கோவில் சாலை, எட்டயபுரம் சாலை வழியாக கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நிறைவு பெற்றது. இந்த ஊர்வலத்தில் சுமார் 150 அடி நீள தேசியக் கொடியை சுமந்தபடி பாஜகவினர் ஊர்வலம் சென்றனர். பிரமாண்ட ஊர்வலத்தை சாலையின் இருபுறத்திலும் நின்று பொதுமக்கள் பார்வையிட்டனர்.
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு(ஜி.வி.என்.) கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கல்லூரிச் செயலர், கல்லூரி முதல்வர், இயக்குநர், சிறப்பு விருந்தினர் மற்றும் துறைத்தலைவர்கள் பட்டமளிப்பு விழா அங்கியுடன் பாரம்பரிய மரபுடன் விழாமேடைக்கு வந்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. கல்லூரிச் செயலர், ப.மகேந்திரன் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். கல்லுாரியின் முதல்வர் மூ.சுப்புலெட்சுமி வரவேற்று பேசினார். சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர், பா.மகேஷ்குமார் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தாார். விழாவின் சிறப்பு விருந்தினரான, தமிழ்நாடு மாநில […]
தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுவரும் கவர்னர் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 15.8.2025 அன்ற கவர்னர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தில் முதல்-அமைச்சர் புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார். இது தொடராக அமைச்சர் கோவி.செழியன் அறிக்கையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து செயல்பட்டுவரும் கவர்னர் ஆர்.என். ரவி செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 18.8.2025 மற்றும் 19.8.2025 ஆகிய நாட்களில் நடைபெறும் இரண்டு […]







