கோவில்பட்டியில் கண்தானம் விழிப்புணர்வு பேரணி
Oplus_16908288

நாடு முழுவதும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை 15 நாட்கள் தேசிய கண்தான இருவார விழா கடைப்பிடிக்கப்படுகிறது.
இறந்தவர்களின் கண்களைத் தானமாக வழங்குவதன் மூலம், கருவிழி பாதிப்பால் பார்வையிழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கச் செய்யவும்,
கண் தானம் செய்யும் ஒருவர் இறந்து 6 மணி நேரத்திற்குள் விழி வெண்படலத்தை தானமாக வழங்கவும்,ஒருவரின் கண்கள் மூலம் நான்கு பேருக்குப் பார்வை கிடைக்கச் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேசிய கண் தான இரு வார விழா மூலம் நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் இன்று ( செப்டம்பர் 5) கோவில்பட்டியில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் நேஷனல் என்ஜினியரிங் கல்லூரி,லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி,கே ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள்,கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனை செவிலியர்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் கையில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பி பயணியர் விடுதி முன்பிருந்து தொடங்கி பிரதான சாலை வழியாக ஆர் சி மேல்நிலைப் பள்ளியை அடைந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி கண் தான இயக்க தலைவர் விநாயகா ரமேஷ் தலைமை தாங்கினார். நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் மீனாட்சி,
கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவில்பட்டி கண் மருத்துவமனை மருத்துவர் சுகன்யா அனைவரையும் வரவேற்றார்
கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ், பொன்னூஸ் நேச்சுரல்ஸ் உரிமையாளர் பொன்னுச்சாமி பரஞ்சோதி ஆகியோர் தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் திவ்யன் ஆபிரகாம்,ஸ்ரேயா கபூர்,ஆயுஷ் குப்தா,ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்துச்செல்வம்,சீனிவாசன்,ஜெயபிரகாஷ் நாராயணசாமி, ராஜ்குமார், ராஜமாணிக்கம், நடராஜன்,மாரியப்பன்,கிருஷ்ணசாமி,கண்ணன்,நேஷனல் என்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர்கள் பாலமுருகன்,லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்,கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனை மேலாளர் ராஜாராம் மோகன்ராய் நன்றி கூறினார்.







