ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்தும் விதமாக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான ஆற்றல் மேம்பாட்டு பயிற்சி கோவில்பட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் கடிதத்தின்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி மாவட்ட உதவி திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆலோசனையின்படி இப்பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் கோவில்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட 4 பள்ளிகளிலிருந்தும் கயத்தார் ஒன்றியத்திலிருந்து ஒரு பள்ளி, ஓட்டப்பிடாரம் […]
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் எனக் கூறிய பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த தினமான ஏப்ரல் – 29ம் தேதியை தமிழக முதல்வர் சட்டசபை கூட்டத்தொடரில் ஏப்-29 முதல் மே 5ம் தேதி வரை தமிழ் வார விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார். தமிழக முதல்வரின் அறிவிப்பினை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் தமிழ் வார விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் […]
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கான, மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு அரசு போக்குவரத்து டிப்போ அருகில் நடைபெற்றது. தவெக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றினார். நிகழ்வில் வடக்கு மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர்,கிளை நிர்வாகிகள், சார்பு அணிப் பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழமைகள் என ஏராளமான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் *ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவங்கள் எதிர் காலத்தில் நடைபெறாமல் இருக்க மத்திய அரசு எல்லைகளை இன்னும் பலப்படுத்தி, சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.’ *தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்துக்கு மத்திய அரசு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும். *விஜயகாந்துக்கு மணி மண்டபம் அமைத்திட வேண்டும். சென்னை 100 அடி சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும் […]
கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் மைக்ரோ பாயிண்ட் கம்ப்யூட்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின் முன்னிலை வகித்தார். `தமிழ் எங்கள் உயிர்’ என்ற தலைப்பில் வழக்கறிஞர் ரவிக்குமார், `பாரதிதாசனும் தொழிலாளர்களும்’ என்ற தலைப்பில் பிஎஸ்என்எல் துரைராஜ், `பெரியாரும் பாரதிதாசனும்’ என்ற தலைப்பில் உதவி தலைமை ஆசிரியை முருகசரஸ்வதி, `பாரதிதாசனும் பொதுவுடமையும்’ தலைப்பில் இசை ஆசிரியர் அமலபுஷ்பம் […]
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெள்ளிச்சந்தை கே.வி. மகாலில் தேமுதிக தலைமை செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்துகொண்டு கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்தும், கட்சிபணிகள், எதிர்கால அரசியலில் முக்கிய முடிவுகள், திட்டங்கள் குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார். இந்த நிலையில், தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேமுதிக பொருளாளராக எல்.கே.சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தர்மபுரி […]
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 -வது பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீ கணேச சர்மா திராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு காஞ்சி மடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அட்சய திருதியை தினமான இன்று (புதன் கிழமை) அதிகாலை சந்நியாஸ்ரம தீட்சை வழங்கினார். இந்த நிகழ்ச்சி மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்த திருக்குளத்தில் நடைபெற்றது. இதனையடுத்து காஞ்சி காமாட்சி அம்மன் சந்நிதியில் […]
கோவில்பட்டி ஜி.வி.என் (தன்னாட்சி) கல்லூரியின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், பிளஸ் 2 தேர்வுகளை எழுதி முடித்த மாணவிகளுக்காக ஒரு வார இலவச கோடைகால பயிற்சி வகுப்புகள் (21.04.2025 முதல் 29.04.2025 வரை) நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்புகளில், கணினி அடிப்படைத் தகவல்கள், அடிப்படை மின்னணுவியல், மொழிப்புலமை பயிற்சிகள் மற்றும் தையல் பயிற்சி ஆகியவை உள்ளடக்கப்பட்டிருந்தன. கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்சிகளை செய்முறை அடிப்படையில் வழங்கினார்கள், மேலும் அவர்களின் ஆர்வத்தையும், கல்வித் திறனையும் வளர்க்கும் வகையில் […]
தமிழ்நாட்டில் ஊர்க்காவல் படையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் 26 ஊர்க்காவல் படை வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மையை பாராட்டி டெல்லி பொது இயக்குநரகம் – தீயணைப்பு சேவைகள், குடிமை பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவித்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 20 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வரும் படைத் தளபதி உலகம்மாள் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக பாராட்டு சான்றிதழ் மற்றும் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார். உள்துறை அமைச்சகம் மூலமாக […]
கோவில்பட்டி கிரா நினைவரங்கத்தில் போன்சாய் புக்ஸ் நிறுவனத்தின் சார்பில் எழுத்தாளர் தங்கத்துரையரசி ஏற்பாடு செய்திருந்த ‘வாசகம்’ என்ற உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. எழுத்தாளர் கண்மணிராசா எழுதிய ‘கூத்து’ சிறுகதைத் தொகுப்பு குறித்து அதனை வாசித்தவர்கள் தங்கள் வாசக அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். போன்சாய் புக்ஸ் ப்ரியதர்ஷினி, சிறார் எழுத்தாளர் வரகவி முருகேசன், ஜீவாசுரேஷ், மாரிச்செல்வி,மகாலட்சுமி,இந்துமதி,எழுத்தாளர்கள் ராம்சித்ரா,பொன்னு லட்சுமி,மழயிசை, உஷா,பத்மா சிங்கராயன், முகிலன், முத்து முருகன்,தினகரன்,குமரேசன்,செல்வக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு தொகுப்பிலுள்ள கதைகள் குறித்துப் பேசினர். ஒரு படைப்பு குறித்து […]