• April 27, 2024

Month: January 2023

செய்திகள்

அரசு செலவில் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் வேலையை செய்கிறது; தமிழக அரசு மீது டி.ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு பொய்யாக தொடுக்கப்பட்டது என்று கூறி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருக்கிறது. இது பற்றி முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:- அரசு இயந்திரத்தை மக்களுக்கு முழுமையாகப் பயன்படுத்தும் வகையிலே.பணம் என்பது மக்கள் கொடுக்கும் வரிப் பணத்தில் சாலை வசதி,மின்சாரம் போன்ற வசதிகளைச் செய்யவேண்டும் துறைகளுக்கு நிதி […]

செய்திகள்

போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கும் முயற்சி; தி.மு.க.மீது தேர்தல் அதிகாரியிடம் டி.ஜெயக்குமார்

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சந்தித்து அ.தி.மு.க. சார்பில் புகார் மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கவுள்ள சூழ்நிலையில்  தேர்தலைப் பொறுத்தவரையில் நியாயமாகவும்,அமைதியாகவும்,நேர்மையாகவும், அதேபோல அதிகார துஷ்பிரயோகம் போன்ற அத்தனையும் தி.மு.க. கட்டவிழுத்து விடுகின்ற ஒரு  நிலையில் அதனை எல்லாம் முழுமையாகத் தடுத்து, சுதந்திரமான,நியாயமான தேர்தலை நடத்தவேண்டும் என்ற வகையிலே […]

செய்திகள்

சென்னை கடலில் பேனா நினைவு சின்னம் அமைத்தால் உடைப்பேன் ; கருத்து கேட்பு

முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.  இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி நகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து பா.ஜனதா சார்பில் பஸ் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.டாக்டர் விஜயகுமார் , அசோக் மற்றும் நகர பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர், கூட்டத்தில் பேசியவர்கள், சொத்து பெயர் மாற்றம், புதிதாக தீர்வை போடுவதற்கு லஞ்சம் பெறப்படுவதாக குற்றம் சாட்டினார்கள். மேலும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வார்டுகளுக்கு மட்டும் சாலை, சாக்கடை வசதி செய்து தருவதாகவும் மற்ற கவுன்சிலர்கள் வார்டுகள் புறக்கணிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டனர், ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட […]

கோவில்பட்டி

மினி பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம்: கோவில்பட்டி கலைக் கல்லூரிக்கு அரசு

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அரசு அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி நகரில் இருந்து ஒதுக்குபுறத்தில் கதிரேசன் கோவில் மலை அடிவாரத்தில் இருக்கும் இந்த கல்லூரி கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்ககளை சேர்ந்த ஏழை, நடுத்தர மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அதே சமயம் இங்கு  பயிலும் மாணவர்களுக்கு கல்லூரிக்கு வந்து செல்வதற்கு சரியான போக்குவரத்து வசதி இல்லை…. காலை, மாலை வேளைகளில் அரசு கல்லூரிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை […]

செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைதேர்தல்: காங்கிரஸ் கலைப்பிரிவு பணிக்குழு அமைப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிக்காகப் பணியாற்ற, தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில் கீழ்க்கண்டவாறு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.  இவர்கள், ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவர் மோகன் குமாரமங்கலம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழுவுடன் இணைந்து களப்பணியாற்றுவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். 1) தலைவர்  எஸ். ஜாபர் அலி, ஈரோடு […]

செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, திருவாரூர் ஆட்சியர் ஆனார்

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ பணியிட மாற்றம் செய்யப்பட்டு, திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு உள்ளார்.  திண்டுக்கல் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட இயக்குனர் சி.தினேஷ்குமார் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் 30-க்கு அதிகமான  ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி  நெல்லை மாவட்ட ஆட்சியராக கே.பி.கார்த்திகேயன் நியமனம். செய்யப்பட்டு இருக்கிறார். தென்காசி ஆட்சியராக ரவிசந்திரன், விருதுநகர் ஆட்சியராக ஜெயசீலன், கிருஷ்ணகிரி ஆட்சியராக தீபக் ஜேக்கப், விழுப்புரம்  ஆட்சியராக பழனி […]

தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு செவிலியர் பயிற்சிப்பள்ளி மாணவிகள் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடி அரசு செவிலியர் பயிற்சிப்பள்ளி வளாகத்தில் மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமை தாங்கினார், துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (தொழுநோய்) யமுனா வரவேற்று பேசினார்.. தூத்துக்குடி துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பொற்செல்வன், சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் கற்பகம், மருத்துவக்கல்லூரி முதல்வர் சிவகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்..  துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (குடும்ப நலம்) பொன் இசக்கி, துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் […]

பொது தகவல்கள்

8 வடிவ நடை பயிற்சி செய்வது எப்படி?

எட்டு”* போடுகிறவனுக்கு *”நோய்”* எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி… *உங்கள் வீட்டின் உள்ளேயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து, * 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் செவ்வக கோடு இட்டு  அதற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள்…!*”…இது தெற்கு வடக்காக நீளப் பகுதி இருக்கணும்…” *காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த *8* வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தே.மு.தி.க. அலுவலகத்தில் புதிதாக தேர்ந்தெடுத்த நிர்வாகிகள் அறிமுககூட்டம் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் மற்றும் பிப்ரவரி 12 கழக கொடிநாள் நிகழ்ச்சி பற்றிய ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் கொம்பையாபாண்டியன் செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன் மலைராஜ் பொதுக்குழு உறுப்பினர் ரெங்கசாமி நகர் செயலாளர் நேதாஜி பாலமுருகன் மாவட்ட துணை செயலாளர் மாரிச்செல்வம் மேற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள்சாமி கிழக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் […]