• April 27, 2024

Month: September 2023

தூத்துக்குடி

தூத்துக்குடியில் `ஹேப்பி ஸ்ட்ரீட்’ நடத்த அனுமதிக்க கூடாது; இந்து இளைஞர் முன்னணி கோரிக்கை

தூத்துக்குடி மாவட்ட இந்து இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கவிசண்முகம் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு  அலுவலகம் சென்று அளித்த கோாரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-  மதுரை அண்ணாநகர் பகுதியில் கடந்த 24ம் தேதி நடைபெற்ற `ஹேப்பி ஸ்ட்ரீட்’  நிகழ்ச்சியில் போதுமான முன்னேற்பாடுகள் இல்லாமல் அதிகளவு மக்கள் கூட்டத்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தனர். இளைஞர்களுக்குள் அடிதடி போன்ற விபரீத முடிவுகள் ஏற்பட்டது. .திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் சமுதாய ரீதியான பிரச்சினை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி  அரசு மகளிர் பள்ளியில் 11 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம்; பூமி

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் மூலம் 11 வகுப்பறைகள் கொண்ட  புதிய  கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர் உலகராணி,பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரெங்கம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியை உஷா ஜோஸ்பின் அனைவரையும் வரவேற்றார், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் கலந்து […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி மேயருக்கு  மு.க.ஸ்டாலின் பாராட்டு  

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளில் இருந்து அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி சிறக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் மூலம் இந்தியாவிலேயே கல்வி உட்பட அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது.  அந்த வகையில் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் சிறப்பான கல்வியினை வழங்கும் மகத்தான பணிக்காக இந்தியாவிலேயே மூன்றாவது சிறந்த […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு

கோவில்பட்டி ஜெயஸ்ரீ மஹாலில் ,சென்ட்ரல் லயன்ஸ் சங்கம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கோவில்பட்டி மையம் சார்பாக ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்ட்ரல் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் சிவராஜகோபால் தலைமை தாங்கினார் . செயலாளர் லயன் சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். 324-A லயன்ஸ் மாவட்ட கவர்னர். பிரான்சிஸ் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் […]

தூத்துக்குடி

உலக இருதய தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

உலக இருதய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையின் இருதய நலத்துறையான இதயாலயா தி ஹார்ட் சென்டர் சார்பில் இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அருள்ராஜ் மற்றும் இருதய நல நிபுணர் டாக்டர் நீலாம்புஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி முதல்வர் வீரபாகு மற்றும் பியர்ல் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் முகம்மது இப்ராகிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.  இளம் வயது மாரடைப்பை தவிர்க்கும் பொருட்டு கல்லூரி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி நகராட்சி கூட்டம்: உறுப்பினர்கள் எழுப்பிய கோரிக்கைகள்

கோவில்பட்டி நகராட்சி மாதாந்திர கூட்டம் தலைவா் கா. கருணாநிதி தலைமையில் நடந்தது. துணைத் தலைவா் ஆா்.எஸ். ரமேஷ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் பொறியியல் பிரிவைச் சோ்ந்த முனீஸ்வரன், நகரமைப்பு அலுவலா் சேதுராஜன், வருவாய் ஆய்வாளா் நாகராஜன், சுகாதார ஆய்வாளா் சுதாகரன், நகா்மன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா் உறுப்பினர்கள் விவாதம் விவரம் வருமாறு:- கவியரசன் (அதிமுக):- கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயில் நின்றுசெல்ல வலியுறுத்தி கடம்பூா் செ. ராஜு எம்.எல்.ஏ. தெற்கு ரெயில்வே கோட்ட மேலாளரிடம் இரண்டு முறை மனு […]

கோவில்பட்டி

ஓட்டப்பிடாரம் அருகே 2 இடங்களில் உயர்மட்ட பாலங்கள்; அடிக்கல் நாட்டு விழா நடந்தது

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணியாச்சி ஊராட்சி சுந்தரராஜபுரம் கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் 2  இடங்களில் உயர்மட்ட பாலம் கட்டவேண்டும் என்று கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். அதாவது ஊருக்கு மேற்கு பகுதியில் மழைக்காலங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஓடையின் நடுவே உயர்மட்ட பாலம் , ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் மாணவ மாணவிகள் மழைக்காலங்களில் சிரமம் இன்றி சென்றுவர ஓடையின் நடுவே உயர்மட்ட பாலம் அமைத்துதர வேண்டும் என்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா ஒட்டப்பிடாரம் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உயர் மருத்துவ சிகிச்சைக்கான புதிய கட்டிடம்

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உயர் மருத்துவ சிகிச்சைக்கான கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு உள்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவர்களும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர். கீதாஜீவன் ஆகியோர் பார்வையிட்டனர். கட்டிடத்தின் தரம் பற்றி பொறியாளர்களிடம் கேட்டறிந்தனர். பணிகள் எப்போது முடியும் என்றும் கேட்டனர். பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒவ்வொரு வார்டாக சென்று பார்வையிட்டனர். நோயாளிகளிடம் மருத்தவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றியும் […]

கோவில்பட்டி

கழுகுமலையில் சீரான குடிநீர் விநியோகம் கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே கழுகுமலை பேரூராட்சியில்  பொதுமக்களுக்கு சீராக குடிநீர்  வழங்காததை கண்டித்தும் புதிய குடிநீர் கட்டணம் இணைப்பிற்கு லஞ்சம் அதிகம் வாங்குவதாக புகார் கூறியும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.கழுகுமலை மேற்கு ஒன்றிய தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடந்த இந்த  மாவட்ட பொதுச் செயலாளர் வேலு ராஜா, பொருளாளர் கே.கே.ஆர். கணேசன், துணை தலைவர் ராஜ்குமார், ஒன்றிய துணைத் தலைவர் முத்துராமலிங்கம், தொழிற்பிரிவு மாவட்ட தலைவர் மாரியப்பன், கோவில்பட்டி நகர பொதுச்செயலாளர் விஜயகுமார், கயத்தாறு கிழக்கு ஒன்றிய […]

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; கோவில்பட்டியில் அக்டோபர் 17

தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-  “தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மின்நுகர்வோர்கள் சார்ந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதம் தோறும் கோட்ட அளவில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 3-ம் தேதி காலை 11 மணிக்கு திருச்செந்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட திருச்செந்தூர் உதவி பொறியாளர் அலுவலகத்தில் நடத்தப்படுகிறது.  10-ம் தேதி தூத்துக்குடி நகர்ப்புற கோட்டத்துக்கு உட்பட்ட புளியம்பட்டி உதவி பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. 17-ம் தேதி கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட […]