கோவை கார் குண்டுவெடிப்பு: தமிழக மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யவேண்டும்- டி.ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- தி.மு.க. அரசு வரும்போதெல்லாம், இரண்டு விஷயம் தலை தூக்கும். தீவரவாதம், வெடிகுண்டு கலாச்சாரம் தான் . இது தி.மு.க. ஆட்சியில் எப்போதும் நடக்கின்ற விஷயம். 89, 91 ம் ஆண்டு , தி.மு.க. ஆட்சி இரண்டாண்டு காலம் தான் இருந்தது. அந்த ஆட்சி எதனால் கலைக்கப்பட்டது. தீவிரவாத்த்தை ஊக்கப்படுத்தியதால் கலைக்கப்பட்டது. அதைப்போன்று இந்த முறையும் வன்முறை , பிரச்சினைகள் உருவாவது தி.மு.க. ஆட்சியில் சர்வசாதாரணம். […]