• May 21, 2024

Month: May 2024

செய்திகள்

காதலி கண் முன்னே வாலிபர் வெட்டிக்கொலை : திடுக்கிடும் தகவல்கள் 

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தை சேர்ந்தவர் தீபக் ராஜா(வயது 30). இவர் நேற்று தனது காதலியுடன் பாளையங்கோட்டை  கேடிசி நகர் பகுதியில் உள்ள பிரபல அசைவ ஓட்டலில் உணவருந்த சென்றுவிட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த 6 பேர் அவரை சுற்றி வளைத்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரே நேரத்தில் தீபக் ராஜாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். திடீர் தாக்குதலில் சமாளிக்க முடியாமல் சம்பவ இடத்திலேயே தீபக் ராஜாபரிதாபமாக இறந்து போனார்.  இந்த […]

கோவில்பட்டி

ராஜீவ் காந்தி நினைவு தினம்: பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு 

முன்னாள் பாரத பிரதமர்  ராஜீவ்காந்தி 33வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி  கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு  மலர் தூவி மரியாதைசெலுத்தப்பட்டது. மேலும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது இதில் கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன் தலைமை  தாங்கினார் மாவட்ட செயலாளர் துரைராஜ், மாவட்ட பொருளாளர் கார்த்திக் காமராஜ், மாவட்ட பொது செயலாளர் ஐ என் டி யு சி ராஜசேகர் ஆகியோர் முன்னிலைவைத்தார்.  ராஜீவ் காந்தி […]

கோவில்பட்டி

ஆலம்பட்டி உச்சினி மாகாளியம்மன் கோவில் வைகாசி மாத கொடை விழா

கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி தெற்கு தெருவில் அமைந்துள்ள உச்சினி மாகாளியம்மன் திருக்கோவில் வைகாசி மாத கொடை விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாரதனை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் பக்தர்களுக்கான அன்னதானத்தை தொடங்கி வைத்தார். அதிமுக மேற்கு ஒன்றியசெயலாளர் அழகர்சாமி,எம்ஜிஆர் இளைஞர் அணி மேற்கு ஒன்றிய செயலாளர் அம்பிகைபாலன், கலை இலக்கியபிரிவு மாவட்ட செயலாளர் போடுசாமி, ஆலம்பட்டி கிளை செயலாளர் முருகன் […]

கோவில்பட்டி

ஏஜி சபையின் கோடைகால விடுமுறை வேதாக பள்ளி வகுப்பு

 தூத்துக்குடி வடக்கு மண்டல ஏஜி சபைபாண்டவர் மங்கலத்தில் கோடைகால விடுமுறை வேதாகபள்ளி வகுப்பு ஒரு வாரம் நடைபெற்றது. அப்போது மெய்யானதீபம் என்ற கருப்பொருளைவைத்து பாடம்நடத்தப்பட்டது. இதில்130 சிறுவர், சிறுமிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்குபாடல்கள், கதைகள் , கவிதைகள் , வசனங்கள் கற்று தரப்பட்டன. பயிற்சியின் ஆசிரியர்களாக மகேஷ்,எப்சிபா,கீதா,வார்சா,சுதர்சனம் ஆகியோர் செயல்பட்டனர். நிறைவுநாள்நிகழ்ச்சிக்கு ஏஜிசபைபோதகர்வேதமாணிக்கம்தலைமைதாங்கினார். சபையின் தலைவர் விஜயன் முன்னிலை வகித்தார். பயிற்சியில்கலந்துகொண்ட 130 சிறுவர், சிறுமிகளுக்கும்லட்சுமணன்என்றகிதியோன்பரிசுவழங்கிபாராட்டினார். ,இந்நிகழ்ச்சியின்ஏற்பாடுகளைபத்மா, கமலாம்பாள் ,தெய்வபாலன்,சுந்தராஜ்,சாரதா, ஆகியோர் செய்திருந்தனர்.

தூத்துக்குடி

வி.ஏ.ஓ. பணிக்கான இலவச மாதிரி தேர்வுகள் 

 தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது :- தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நடத்தும், TNPSC Gr -4/வி. ஏ. ஓ. தேர்வினை எளிமையாக எதிர்கொள்ள போட்டித்தேர்வு ஆர்வலர்களுக்கு,  மாநில அளவிலான இலவச  முழு மாதிரித்தேர்வுகள் நடத்திட  திட்டமிடப்பட்டுள்ளது.  தேர்வு நாட்கள்: மே- 17,21,24,27,30 & ஜூன் 1 முதல் மாதிரி தேர்வு சென்ற வாரம் வெள்ளிக்கிழமை (17.5.24) காலை நடைபெற்றது. இரண்டாவது மாதிரி தேர்வு நாளை செவ்வாய்க் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்

கோவில்பட்டி புத்துயிர் ரத்ததான கழகம், மக்கள் நலம் அறக்கட்டளை, கிருஷ்ணன் கோவில் சங்கரா கண்மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பாக கோவில்பட்டி ஆயிரவைசிய துவக்கப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.   புத்துயிர் ரத்ததான கழக செயலாளர் க.தமிழரசன் தலைமை தாங்கினார். மருத்துவர் ராஜேஸ்வரி 60 பேருக்கு கண் பரிசோதனை செய்தார் 18 பேர் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.    முகாமில் நடராஜபுரம் தெரு பொது மக்கள் நல வாழ்வு இயக்க தலைவர் […]

கோவில்பட்டி

ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோவில் வருடாபிஷேக விழா

 கோவில்பட்டி அடுத்த ஓடைப்பட்டி கிராமத்தில் உள்ள வன்னி விநாயகர் கோவில் 12 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது.  இதையொட்டி   கோவில் மண்டபத்தில் வன்னி விநாயக பெருமானுக்கு கணபதி ஹோமம் மற்றும் நவகலச ஸ்நபன பூஜை நடைபெற்றது.இந்த பூஜைகள் பக்தர்கள் ஏராளமானவர்கள்.  வன்னி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து  சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கி 14 ஆடுகளுடன் பெண் சாவு

கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மாலை  இடி மின்னலுடன் பலத்தமழை பெய்தது. அந்த சமயத்தில் வடக்கு திட்டங்குளத்தை சார்ந்த சண்முகசுந்தரம் மனைவி ஆச்சியம்மாள் (வயது 63) ஆடுகளை மேய்த்துக்கொண்டு  வீடு திரும்பினார். இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் .  ஆச்சியம்மாள் ஆடுகளுடன் மரத்தின் கீழ் ஒதுங்கி நின்றார். அப்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலே அவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 14 ஆடுகளும் பலியாகின. மழை ஓய்ந்ததும் ஆச்சியம்மாளை தேடி வந்த உறவினர்கள் ஆச்சி அம்மாளும் […]

கோவில்பட்டி

நீர் நிலைகளின் கரையோரங்களில் பனை விதைகளை விதைக்க வேண்டும்; பாதுகாப்பு குழு கூட்டத்தில்

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி ஒன்றியம் குரும்பூர் அருகே அங்கமங்களம் சமுதாய நலக்கூடத்தில் தூத்துக்குடி மாவட்ட நீர்நிலைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர்  எஸ் பானுமதி வரவேற்றார். சமூக ஆர்வலர் அங்கமங்கலம் என். பாலமுருகன், காயல். ஜாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் […]

கோவில்பட்டி

மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் ; முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டத்தில் தீர்மானம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலக்குமி ஆலைமேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு மாநில தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார் கவுரவ தலைவர் வெள்ளைச்சாமி,பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத்துணைத் தலைவர் முஜிபுர் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் மாநில முன்னாள் தலைவர் பெருமாள்சாமி, பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்களுக்கு […]