தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைப்பு
![தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைப்பு](https://tn96news.com/wp-content/uploads/2024/05/996818-850x560.jpg)
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைக்கபப்ட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 -ந்தேதி திறக்கப்படுவதாக இருந்தது. தேர்தல் முடிவு 4ந்தேதி வெளியாக இருப்பதால் , திறப்பு தேதி தள்ளிவைக்க்பட்டு 6 ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை அறிவித்து இருந்தது. அதன்படி பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன,
இந்த நிலையில் கோடை வெயில் தாக்கம் இன்னமும் அதிகமாகவே இருக்கிறது, இதனால் பள்ளிகள் திறப்பை இன்னும் தள்ளி வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதை தொடர்ந்து தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதியில் மீண்டும் மாற்றம் செய்துள்ளதாக பள்ளி கல்விவித்துறை தெரிவித்து உள்ளது.
அதன்படி ஏற்கனவே அறிவித்த ஜூன் 6 -ந் தேதிக்கு பதிலாக ஜூன் 10-ந் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அதிகாரப்பூர்வ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதே போல் புதுச்சேரி மாநிலத்திலும் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 10-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்க்பப்ட்டுள்ளது,
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)