கோவில்பட்டியில் 14 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்;கீதா ஜீவன் அணிவித்தார்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளான நேற்று (ஜுன் – 3) பிறந்த கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிறந்த 14 குழந்தைகளுக்கு கோவில்பட்டி நகர திமுக சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான பெ.கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 14 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.
தொடர்ந்து , தாய்மார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் ஊட்டச்சத்து பெட்டகம், பழங்கள் மற்றும் இனிப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில்பட்டி நகர திமுக செயலாளர் கருணாநிதி செய்திருந்தார்.

நிகழ்ச்சியில் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் முருகேசன், முன்னாள் யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் சிவா, ரமேஷ், செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன்,மாவட்டத் துணைச் செயலாளர் ஏஞ்சலா,மாவட்ட பிரதிநிதிகள் ரவீந்திரன்,அசோக்குமார்,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ்,மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இந்துமதி, பொருளாளர் ராமமூர்த்தி,மகளிரணியினர்,இளைஞரணியினர்,வார்டு செயலாளர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.








