• April 27, 2024

Month: October 2023

கோவில்பட்டி

கோவில்பட்டி ஏ.வி. மேல்நிலைப்பள்ளி சத்துணவு மையத்துக்கு ஐ.எஸ்.ஓ.தரச்சான்றிதழ்

தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டத்தின் கீழ் செயல்படும் 4 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ .தரச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதியிடம் சென்னைதனியார் . நிறுவனத்தினர் இன்று (31.10.2023) வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்ததாவது:-  மத்திய அரசின் மேலாண்மை, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு (MME) திட்டத்தின் கீழ் 100 சத்துணவு மைங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு Quest Certification (P) Ltd. என்ற நிறுவனத்தின் மூலம் தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்ட […]

கோவில்பட்டி

கோவில்பட்டி நகராட்சியுடன் 7 ஊராட்சிகளை இணைக்க தீர்மானம்

கோவில்பட்டி நகராட்சி கூட்டம் நகர் மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் கமலா முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.  .. இக்கூட்டத்தில் இனாம் மணியாச்சி, மூப்பன்பட்டி , இலுப்பையூரணி, திட்டங்குளம் , பாண்டவர்மங்கலம், மந்திதோப்பு, நாலாட்டின் புதூர் உள்ளிட்ட 7 ஊராட்சிகளை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. இந்த தீர்மானம் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்படும். அதை தொடர்ந்து நிர்வாக பணிகள் தொடரும்.

கோவில்பட்டி

தேசிய ஒற்றுமை தினம்: மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

நாடு முழுவதும் அக்டோபர் -31ம்தேதி (இன்று) இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்பட்டது.. கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில்  மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பட்டேலின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்..பின்னர் தேசிய ஒற்றுமை தினம் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில்  பங்கேற்ற  மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம், விவேகானந்த கேந்திரத்தின் பண்பாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் கண்ணன் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே 70 வருட ஆக்கிரமிப்பு  சுவர்கள் அகற்றம்

தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இளயரசனேந்தல் குறுவட்டம் வடக்கு பட்டி கிராமத்தில் உள்ள சாலையை மறித்து சுவர்கள் மற்றும் தெருவின் நடுவில் தென்னை மரங்கள் நடப்பட்டு இருந்தன. ஒரு சமூதாயத்தை சேர்ந்தவர்கள் இந்த பாதையை பயன்படுத்தக்கூடாது என்பதற்காக சிலர் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடந்த  கடந்த 70 ஆண்டுகாலமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுவர்களும் தெருவின் நடுவில் நட்டப்பட்ட மரங்களும் நீதிமன்ற உத்தரவுபடி அகற்றுவதற்கு  வருவாய்துறை நடவடிக்கை  மேற்கொண்டது. இன்று காலை. மேற்படி  சாலையில் உள்ள சுவர்களையும் […]

ஆன்மிகம்

நினைத்ததை நிறைவேற்றும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி

குன்றுதோறாடும் குமரக்கடவுள் குடிகொண்டிருக்கும் சிறந்த தலங்கள் பலவற்றுள் ஒன்று கழுகுமலை…கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவிலுக்கும் மத்தியில் உள்ள ஒரு சிறந்த முருகதலம்- செவ்வாய் தலம்- யாத்திரை தலம்- காணிக்கை தலமும்கூட. நினைத்ததை நிறைவேற்றும், பகைவரும் உறவாடும் நிலைக்கு உயர்த்தும் திருத்தலம் முருகன் மேற்கு முகமாக வீற்றிருக்கும் மூன்று தலங்களில், இத்தலத்தை ராஜயோக தலம் என்று கச்சியப்பரால் போற்றப்பட்டுள்ளது தமிழகத்தில் முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு அடுத்தாற்போல் சிறந்து விளங்கும் முருகத்தலங்களில் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் தமிழகத்தின் தென்பழனி என்று அழைககப்படுகிறது.. கழுகுமலையில் […]

தூத்துக்குடி

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

ஒவ்வொரு ஆண்டும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 31ம் தேதி தேசிய ஒற்றுமை நாளாக கடைபிடிக்கப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன் தலைமையில் இன்று “தேசிய ஒற்றுமை நாள்” உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளர்  அந்தோணியம்மாள் உள்ளிட்ட  காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலக நிர்வாக அதிகாரிகள்  குமார்,  ராமசுப்பிரமணிய பெருமாள், அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், […]

கோவில்பட்டி

சமுதாய பணிகள் குறித்த மாவட்ட கருத்தரங்கு; கோவில்பட்டியில் நடந்தது

கோவில்பட்டி சவுபாக்யா மஹாலில் ரோட்டரி மாவட்ட 3212 சார்பில் சமுதாயப் பணிகள் குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கு நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கருத்தரங்கு சேர்மன் விநாயகா ரமேஷ் தலைமை தாங்கி  வரவேற்றார். ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர்கள் சின்னத்துரை அப்துல்லா, இதயம் முத்து, ஆறுமுகப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அளவிலான கருத்தரங்கினை ரோட்டரி மாவட்ட ஆளுநர் முத்தையா பிள்ளை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். ரோட்டரி பவுண்டேசன் மண்டல உதவி ஒருங்கிணைப்பாளர் முத்து பழனியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து […]

செய்திகள்

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார் கோவில்பட்டி அன்னபாரதி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்கி நடைபெற்று வருகிறது. 18 பேருடன் தொடங்கிய  ஆட்டத்தில் 3 பேர் வெளியேறி   இருந்த  நிலையில் நேற்று இரண்டு பேர் வெளியேற்றப்பட்டனர். யுகேந்திரன், வினுஷா ஆகியோர் எவிக்ட் ஆனதை தொடர்ந்து வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக 5 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். டெலிவிஷன் நடிகர் தினேஷ், பட்டிமன்ற பேச்சாளர் அன்னபாரதி, வி.ஜே. மற்றும் சீரியல் நடிகை அர்ச்சனா, ஆர்.ஜே. பிராவோ, கானா பாடகர் பாலா ஆகியோர் […]

கோவில்பட்டி

116 வது ஜெயந்திவிழா: கோவில்பட்டியில் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 116 வது ஜெயந்திவிழா இன்று கொண்டாடப்பட்டது. கோவில்பட்டியில் அரசியல் கட்சியினர்,தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். கோவில்பட்டி மத்திய பகுதி ஒன்றிய ம.தி.மு.க.  சார்பில் வடக்கு திட்டங்குளத்தில் அமைந்துள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ் ‌ரமேஷ், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், மாநில கலைத்துறை துணை அமைப் பாளர் கோடையடி ராமச்சந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் […]

செய்திகள்

தேர்தலுக்கு முன் அல்வா, தேர்தலுக்கு பின்னர் ரசகுல்லா; தி.மு.க.பற்றி முன்னாள் அமைச்சர் டி

சென்னை ராயபுரத்தில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் பூத் கமிட்டி நிர்வாகிகள் இடையே உரையாற்றிய முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் கூறியதாவது:- தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்து 29 மாதங்களுக்குப் பிறகு குறைந்த அளவிலான பெண்களுக்கு […]