அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பாலியல் வன்முறை முதல், கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் கடத்தல் வரை உலகில் உள்ள அனைத்து சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருபவர்கள் ஆளும் திமுகவினர் என்பது, அண்மையில் வெளிவரும் செய்திகள் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. குற்றவாளிகளின் கூடாரமாகத் திகழும் திமுகவினர், தங்கள் மீதான களங்கத்தை மறைக்க அதிமுக மீது பழிபோட்டு, நடந்த பிரச்சினையை திசை திருப்புவது வாடிக்கையாகிவிட்டது. டோல்கேட்டில் பணம் செலுத்தாமல் […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது, ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் இயற்கை வளங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தை திமுக அரசு பாலைவனமாக மாற்றி வருகிறது. மேலும்,ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளுவது தொடர்பான அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நேரத்தில்,13 மணல் குவாரிகளை திறப்பதற்கு திமுக அரசு ஏன் நடவடிக்கை எடுத்து வருகிறது..இந்த திட்டத்தை கைவிடாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் […]
கோவில்பட்டி அருகே கீழஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் கூட்டம் நடைபெற்றது, கல்வி ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை பீட்டர் ஆரோக்கியராஜ், கல்லூரி முதல்வர் முனைவர் பிரபு முன்னிலை வகித்தார்கள். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பவுன்ராஜ் வரவேற்று பேசினார். .சிறப்பு விருந்தினாராக பங்கேற்ற முன்னாள் மாணவர் கவுரவிக்கப்பட்டனர், தூத்துக்குடி மாவட்ட புகையிலை கட்டுப்பாடு குழு சமூக ஆர்வலர் ரொசாரி பாத்திமாவுக்கு முன்னாள் மாணவர் சங்கப் பொறுப்பாசிரியர் முனைவர் சிவசங்கரி பொன்னாடையும், சிறப்புப் […]
கோவையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலை பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இது தென்கைலாயம் என்று பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது. இந்த கோவில் அடிவாரத்தில் இருந்து செங்குத்தாக உள்ள 7 மலைகள் ஏறி, சுயம்பு வடிவில் காட்சி தரும் சிவனைத் தரிசிக்க ஆண்டுதோறும் பக்தர்கள் மலை ஏறிச் செல்வது வழக்கம். வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து, மே மாதம் இறுதி வாரம் வரைக்கும் வனத்துறையினர் அனுமதி அளிப்பார்கள். இதில், மகா […]
கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை மாணவர்களுக்கு கழிவு மேலாண்மை,நீர் மேலாண்மை,தன் சுத்தம்,சுற்றுப்புற சுகாதாரம்,கழிவறை பயன்பாடு, நீரை சிக்கனமாக பயன்படுத்துதல்,தூக்கி எறிந்த பிளாஸ்டிக் பொருட்களை பயனுள்ள பொருட்களாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால கணேசன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட தலைமை உதவி ஆளுநர் ஜெயபிரகாஷ் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு செயல்விளக்க பயிற்சியை தொடங்கி வைத்து […]
மொழிப்போர் தியாகிகள் நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம்; மு.க.ஸ்டாலின் திறந்து
சென்னை மூலக்கொத்தளத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து மொழிப்போராட்ட தியாகிகள் நடராசன், தாளமுத்து ஆகியோரின் நினைவு தினத்தை ஒட்டி அவர்களது திருவுருவ படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக நினைவிடத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்! வீர […]
நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர், கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பராசக்தி- இது வெறும் திரைப்படப் பெயர் மட்டுமல்ல. தமிழ்த் திரையுலக வரலாற்றை 1952க்கு முன் – 1952க்குப் பின் என்று பிரித்துப் பார்க்கலாம். பாடல்களே படங்களாக, பாடத் தெரிந்தவர்களே நடிகர்களாக இருந்ததை மாற்றி, அனல் தெறிக்கும் வசனங்கள், உணர்ச்சியைத் தூண்டும் நடிப்பு, இவற்றோடு சமுதாய புரட்சியையும் ஏற்படுத்திய “பராசக்தி” திரைப்படத்தின் பெயரை மீண்டும் ஒரு திரைப்படத்திற்கு வைப்பது என்பதை ஏற்றுக் கொள்ளவே இயலாது. […]
தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாக அர்ச்சனன். மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். நண்பர்களான இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே வேளார்குளத்தில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளித்தனர். அப்போது அவர்களில் 6 பேர் ஆற்றின் ஆழமான பகுதியில் சிக்கி தத்தளித்தனர். அப்போது அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் விரைந்து சென்று, தண்ணீரில் தத்தளித்த 4 பேரை மீட்டனர். ஆற்றில் […]
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டு இலங்கை சென்றார். அப்போது அங்குள்ள யாழ்ப்பாணம் நகரில் 11 மில்லியன் டாலர் மதிப்பில் கலாச்சார மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இந்த கலாச்சார மையத்தை 2023, பிப்ரவரி மாதம் அப்போதைய இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே, மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இதனிடையே இந்தியா,- இலங்கை நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மையத்துக்கு தற்போது திருவள்ளுவர் பண்பாட்டு […]
எம்.ஜி.ஆர். மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனத்தலைவருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை […]
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- February 2020
- January 2020