பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Oplus_16908288

கோவில்பட்டி எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியின் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையம், தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.. கல்லூரி முதல்வர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். வணிகவியல் துறை மாணவி திவ்ய ஜோதி வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி சமூக நலத்துறை , ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி பொன்னுமாரி கலந்துகொண்டு பெண் குழந்தைகள் எதிர்நோக்கும் சிக்கல்கள் அதைத் தீர்க்கும் வழிமுறைகள் பற்றியும், இந்த சிக்கலைத் தவிர்க்க தங்கள் சேவை மையம் தரும் உதவிகள் ஆலோசனைகள் பற்றியும் விளக்கினார்.

தூத்துக்குடி அரசு இசைக் கல்லூரியின் கலைக்குழு சங்கர் தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமிய கலைஞர்கள் விழிப்புணர்வு நாடகத்தை இயற்றி நடித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பெண்மையை போற்றுவோம் மற்றும் பெண்கள் உரிமையை காப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
முடிவில் வணிக நிர்வாகவியல் துறை மாணவி கல்கி நன்றி கூறினார். வழங்கினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் விஜயகோபாலன், ராம ஜெயா (வணிகவியல் துறை), ரமேஷ் (வணிக நிர்வாகவியல் துறை), செல்வ லட்சுமி (கணினி அறிவியல் துறை), பிரேம லதா (ஆங்கிலத்துறை), மகாலட்சுமி (தமிழ்த்துறை ) ஆகியோர் செய்து இருந்தனர்.







