• March 6, 2026

கோவில்பட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வக்கீல் பாண்டி அறிவித்த வாக்குறுதிகள்

 கோவில்பட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வக்கீல் பாண்டி அறிவித்த வாக்குறுதிகள்

கோவில்பட்டி லட்சுமி திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வுகூட்டம் இன்று காலை நடைபெற்றது.

நடைபெற்ற கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் திரளாகக் கலந்துகொண்ட னர். இக் கூட்டத்தில் வேட்பாளர் வக்கீல் பாண்டி பேசியதாவது:-

 “நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் தேர்தலை முன்னிட்டு 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 234 துப்பாக்கி குண்டுகளை வீசியுள்ளார். அதில் ஒரு குண்டாகத்தான் நான் இங்கு வந்து விழுந்திருக்கிறேன். இந்த குண்டு கோவில்பட்டி மண்ணில் அநீதிக்கு எதிராக ஒரு புரட்சியை ஏற்படுத்தும்.

 கோவில்பட்டியில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது. குறிப்பாக குடிநீர் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை. நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் கோவில்பட்டியை தலைமை இடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும். 

கோவில்பட்டி மாநகராட்சியாக உயர்த்தப்படும். கயத்தாறு நகராட்சியாக மாற்றப்படும். கழுகுமலை தலைமை இடமாக கொண்டு தாலுகா அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்கப்படும். 

காமநாயக்கன்பட்டி தலைமை இடமாக கொண்டு பேரூராட்சி உருவாக்கப்படும். கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் பகுதியில் பட்டா இல்லாமல் அவதிப்படும் மக்களுக்கு உரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்..

“நான் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று 6 மாதங்களுக்குள் இதை நிறைவேற்றவில்லை என்றால், 7வது மாதம் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.

வரும் தேர்தல் தமிழருக்கானதா? அல்லது திராவிடருக்கானதா? இரண்டில் ஒன்றை பார்த்துவிடுவோம்.

 இவ்வாறு வேட்பாளர் பாண்டி பேசினார்.

 உள்ளதாக இளம் மணியாச்சி மேம்பாலத்தில் அருகில் இருந்து தொண்டர்களுடன் ஊர்வமாக வந்த வேட்பாளர் பாண்டி முக்கிய தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *