தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நை.சிலம்பரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-. தூத்துக்குடி மாவட்டத்தில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் மற்றும் முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வாள், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து கொண்டு புகைப்படம் மற்றும் ரீல்ஸ் வீடியோவை பதிவேற்றம் செய்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இருபிரிவினருக்கிடையே சாதி மத மோதல்களை தூண்டும் வகையில் புகைப்படம் அல்லது வீடியோ பதிவேற்றம் செய்தல் போன்றவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை […]
கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட மீனாட்சியம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வருஷாபிஷேக இன்று சனிக்கிழமை, நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், வேதிகார்ச்சனை, வேத பாராயணம், ஸ்ரீமகா கணபதி ஹோமம், ஸ்ரீருத்ர ஹோமம், பரிவார மூர்த்திகளுக்கு மூலமந்த்ர ஹோமம், அஸ்திர ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி மகாபிஷேகம் நடந் தது. தொடர்ந்து காலை 10.35 மணி முதல் 11.30 மணிக்குள் கோவில் விமானகோபுரங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வருஷாபிஷேக மகா […]
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சி.ஜே.ராய் என்பவர் கான்பிடன்ட் குழுமம் என்ற பெயரில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். சில மலையாள திரைப்படங்களையும் தயாரித்திருக்கிறார். இவர், ஸ்லோவாக் குடியரசு நாட்டின் கவுரவ துணை தூதராகவும் இருந்து வந்தார். பெங்களூரு ரிச்மண்ட் சாலையில் உள்ள இவரது அலுவலகத்தில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, பல ஆவணங்கள் சிக்கின. இது தொடர்பாக சி.ஜே.ராயிடம் அதிகாரிகள் ஒன்றரை […]
கோவில்பட்டியில் மினி பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன, டிரைவர்கள் பலர் யார் எங்கு கையை காட்டினாலும் நிறுத்தி ஏற்றிகொள்வார்கள். மேலும் அதிக பயணிகளை ஏற்றிக்கொள்ள ஒருவரையொருவர் முந்தி செல்வது, அதிவேக பயணம் இதுவெல்லாம் அன்றாட காட்சிகள். இந்த நிலையில் இன்று காலை கோவில்பட்டியில் மினி பஸ்சில் கூட்டம் அதிகம் இருந்ததால் பள்ளி மாணவர்கள் சிலர், படிக்கட்டில் நின்றபடி பயணம் மேற்கொண்டனர். அப்போது சாலை நெரிசலில் ஆட்டோவில் ஒரு மாணவரின் தலை இடித்து கீழே விழுந்தார். உடனே பஸ் […]
கோவில்பட்டி எஸ். எஸ். துரைசாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக முதல்வரின் உலகம் உன் கையில் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 117 மாணவர்களுக்கு விலையில்லா மடி கணினி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்/ கல்லூரி முதல்வர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். நாடார் உறவின் முறை சங்கப்பொருளாளர் சுரேஷ் குமார் கலந்து கொண்டு 117 மாணவர்களுக்கு விலையில்லா மடிகணிணியினை வழங்கினார். கல்லூரி துறை தலைவர்கள் விஜயகோபாலன், செல்வ லட்சுமி, கற்குவேல் […]
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பின் படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக 100நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பெயர் மாற்றம் செய்ததை கண்டித்தும், இந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று, வலியுறுத்தியும் நடந்த ஆற்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வாயில் கருப்பு துணி கட்டி […]
2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம், நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் விடுதியில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இதில் குழு உறுப்பினர்களான அமைச்சர் கோவி. செழியன், மாநிலங்களவை உறுப்பினர் எம். எம். அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எழிலன், தமிழரசி ரவிக்குமார், கழக செய்தித் தொடர்புச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்தரன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மனுக்களைப் […]
தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி போட்டி சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி மைதானத்திலும் போரூர் ராமச்சந்திரா செய்கை புல் ஆக்கி மைதானத்திலும் 7 நாட்கள் நடந்தன. சத்தியபாமா பல்கலைக்கழகம் போட்டியை நடத்தியது இப்போட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணி கலந்து கொண்டு விளையாடியன பெண்கள் அணி கால் இறுதிப் போட்டியில் மைசூர் பல்கலைக்கழக அணியிடம் தோல்வி கண்டது. ஆண்கள் ஆக்கி அணி அரை இறுதி லீக் போட்டிக்கு […]
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டம், இணைந்து முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – இது நம்ம ஆட்டம் 2026 என்ற பெயரில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறது. 31.1.2026 அன்று கபடி, வாலிபால், கேரம், கயிறு இழுத்தல் போட்டி, ஸ்ட்ரீட் கிரிக்கெட் (ஆண்கள் மட்டும்), எறிபந்து (பெண்கள் மட்டும்) ஆகிய போட்டிகள் நடக்கிறது, 1.2.2026 அன்று தடகளம் – 100 மீ மற்றும் குண்டு எறிதல், ஓவியம், கோலப் போட்டிகள் மற்றும் உடல்சார் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் உத்தரவின் படி மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் வித்யா விஸ்வநாதன் ஆலோசனையின் படி இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோய் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது மருத்துவ அலுவலர் (பொறுப்பு ) ஏ. .தாய்லட்சுமி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது மேலும் ஆயுஷ் மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ் சக்திரஞ்சன் சுகாதார ஆய்வாளர் அ.பாலசுப்பிரமணியன் மருந்தாளுனர் ஆய்வகநுட்பனர் செவிலியர். சித்த மருத்துவ மருந்தாளுனர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து […]







