• April 20, 2024

Month: June 2022

கோவில்பட்டி

டவுன்பஸ் பழுதானதால், வீட்டுக்கு 7 கி.மீ. நடந்து சென்ற மாணவ, மாணவிகள்

கோவில்பட்டி அருகே கயத்தாறு-அம்மாள்பட்டி இடையே அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் புதுக்கோட்டை, தெற்கு மயிலோடை, கைலாசபுரம், கலப்பைபட்டி, அம்மாள்பட்டி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவிகள் சென்று வருகின்றனர்.இவர்கள் கயத்தாறு சென்று அங்கிருந்து திருநெல்வேலி , கோவில்பட்டி போன்ற ஊர்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று விட்டு மாலையில் மீண்டும் கயத்தாறில் இருந்து அம்மாள்பட்டி டவுன்பஸ்சில் தங்கள் ஊர்களுக்கு திரும்புவது வழக்கம்.இந்த வகையில் நேற்று மாலை 6.30 மணிக்கு கயத்தாறில் இருந்து சென்ற […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் லிங்கம்பட்டி கிராமத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி தாலுகா லிங்கம்பட்டி கிராமத்தில் குடியிருக்கும் 500-க்கும் மேற்பட்ட வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள், தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி 2013 -ஆம் ஆண்டு ஜூலை 4-ந்தேதியும், 2014-ஆம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதியும் கோவில்பட்டி தாலுகா அலுவலகம், உதவி- கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தி கோரிக்கை மனு கொடுத்தனர்.இந்த மனு தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் அலுவலர் ஆகியோர் விசாரணை நடத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் தகுதி அடிப்படையில் […]

சினிமா

நடிகை சுருதிஹாசனுக்கு ஹார்மோன் பாதிப்பு; அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்

நடிகை சுருதிஹாசன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று ரசிகர்களை கவலை கொள்ள செய்துள்ளது. அந்த வீடியோவில் ஸ்ருதிஹாசன் கூறி இருப்பதாவது:-சில நாட்களாக ஹார்மோன் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. மேலும் பி.சி.ஓ.எஸ். என்ற மருத்துவ ரீதியிலான பாதிப்பும் காணப்படுகிறது. (இந்த பாதிப்பு பொதுவாக, சீரற்ற மாதவிடாய், முகம், உடல் பகுதிகளில் முடி அதிகம் வளர்தல் மற்றும் எடை கூடுதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்) இதுபோக வேறு சில தீராத உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்த கூடிய ஆபத்தும் உள்ளது. மேலும் […]

சினிமா

பிருத்விராஜ் நடிப்பில் ‘கடுவா’- தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாகிறது

மலையாள பட உலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிருத்விராஜ், தமிழில் ‘கனா கண்டேன்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘பாரிஜாதம்’, ‘மொழி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்ட பிருத்விராஜ், நடிப்பில் ‘கடுவா’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் வெளியாகிறது. தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்காதது ஏன்? என்பதற்கான விளக்கத்தை பிருத்விராஜ் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-“தமிழில் நான் நடித்த சில படங்கள் இனிமையான […]

செய்திகள்

ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதம் செல்லத்தக்கதல்ல; எடப்பாடி பழனிசாமி பதிலடி

அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி, பொருளாளர் என்று குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார், அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-அன்பு அண்ணன் அவர்களுக்கு வணக்கும்.தங்களின் 29.6.2022-ம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகளின் வாயிலாக தெரிந்து கொண்டேன். பின்னர் மகாலிங்கம் வழியாக பெறப்பட்டது.கடந்த 23.6.2022 அன்று நடைபெற்ற கழக பொதுக்குழுவால் கொண்டு வரப்பட்ட கழக சட்டதிட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை.ஆதலால் அந்த சட்டதிட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்ட்டது. எனவே கழக ஒருங்கிணைப்பாளர் என்ற […]

தூத்துக்குடி

வெளிநாட்டில் செவிலியர் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியபட்டினம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியர் வேலை வாய்ப்பு உள்ளதாக வந்த விளம்பரத்தை பார்த்து, அதில் குரிப்பிட்டிருந்தவர்களை தொடர்பு கொண்டார். அப்போது அவர்கள் செவிலியர் வேலைக்கான பதிவு கட்டணம், விசா செயல்பாடு மற்றும் கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் என பல்வேறு காரணங்களை கூறி அந்த பெண்ணிடம் ரூபாய் 10,65,000 மோசடி செய்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக பாதிக்கபட்ட பெண் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். […]

செய்திகள்

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனுவை விசாரிக்க முடியாது- ஐகோர்ட்டு

சென்னை வானகரத்தில் கடந்த 23-ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி இதில் தலையிட முடியாது என கூறி பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய ஐகோர்ட்டு அமர்வு, ஏற்கனவே திட்டமிட்டபடி பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை […]

செய்திகள்

துபாயில், 2 ஆண்டுக்கு பிறகு தீனிசைப் பாடல்கள் நிகழ்ச்சி

துபாயில் தீனிசைப் பாடல்கள் நிகழ்ச்சி துபாய் தேரா நாசர் ஸ்கொயர் லேண்ட்மார்க் ஓட்டலில் நடந்தது. முஹிப்புல் உலமா கீழை ஏ. முஹம்மது மஹ்ரூப் தலைமை தாங்கினார். ஜலால் இறைவசனங்களை ஓதினார்.ஈமான் சங்க தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லாகான் முன்னிலை வகித்தார்.கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவன தலைவர்முனைவர் ஆ. முகம்மது முகைதீன், பாடகர் நாகூர் நவுசாத் அலி குறித்த அறிமுக உரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நாகூர் நவுசாத் அலி, மறைந்த பாடகரும், அவரது தந்தையுமான நாகூர் இ.எம். […]

ஆன்மிகம்

கர்மா என்பது என்ன?

கர்மா என்றால் என்ன தெரியுமா? அது உங்களுக்கு எந்தவிதக் கெடுதல்களை தரக்கூடியது என்று தெரிந்து கொள்வோம்… ஒருவர் வாழ்க்கையில் சந்தோஷப்படும் பொழுது நீ என்ன புண்ணியம் செய்தாயோ, உனது வாழ்க்கை இவ்வளவு நன்றாக இருக்கிறது என்று சொல்வார்கள்.அதுவே ஒருவர் துன்பப்படும் பொழுது நீ என்ன பாவம் செய்தாயோ இப்படி கஷ்டப்படுகிறாய் என்று சொல்வார்கள்.இதைத்தான் கர்மா என்றும் சொல்வார்கள். அவ்வாறு கர்மா என்னும் வார்த்தையை அனைவரும் தவறாக புரிந்து கொள்கின்றார்கள். கர்மா என்பதை ஒரு சிலர் அபசகுனமாக எடுத்துக் […]

ஆன்மிகம்

இன்று மூன்றாம் பிறை தரிசனம்…சந்திர தரிசனம் செய்ய மறவாதீர் !

இன்று ஜூன் 3௦ வியாழக்கிழமை சந்திர தரிசனம்!இன்று மூன்றாம் பிறை, சந்திர தரிசனம் செய்வதால் மன நிம்மதி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி உண்டாகும். அமாவாசை முடிந்து மூன்றாம் பிறை தரிசனம் பார்த்து விட்டால் அந்த ஆண்டு இரண்டு மடங்கு வருமானம் செல்வ செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை.மூன்றாம் பிறை பார்க்க முடியாவிட்டால் வீட்டில் சிவ வழிபாடு செய்வதும், சிவன் தலையில் இருக்கும் சந்திரனை இன்று மாலை தரிசனம் செய்வது சிறப்பு. வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவைத் […]