• May 3, 2024

கர்மா என்பது என்ன?

 கர்மா என்பது என்ன?

கர்மா என்றால் என்ன தெரியுமா? அது உங்களுக்கு எந்தவிதக் கெடுதல்களை தரக்கூடியது என்று தெரிந்து கொள்வோம்…

ஒருவர் வாழ்க்கையில் சந்தோஷப்படும் பொழுது நீ என்ன புண்ணியம் செய்தாயோ, உனது வாழ்க்கை இவ்வளவு நன்றாக இருக்கிறது என்று சொல்வார்கள்.
அதுவே ஒருவர் துன்பப்படும் பொழுது நீ என்ன பாவம் செய்தாயோ இப்படி கஷ்டப்படுகிறாய் என்று சொல்வார்கள்.
இதைத்தான் கர்மா என்றும் சொல்வார்கள். அவ்வாறு கர்மா என்னும் வார்த்தையை அனைவரும் தவறாக புரிந்து கொள்கின்றார்கள்.

கர்மா என்பதை ஒரு சிலர் அபசகுனமாக எடுத்துக் கொள்கின்றார்கள்.
ஆனால் உண்மையில் கர்மா என்பது என்ன? அது எவ்விதமான பலன்களை கொடுக்கிறது? இதன் மூலம் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன?
தீமைகள் என்ன? என்பதைப் பற்றியும் இவற்றிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை பற்றியும் தெரிந்து கொள்வோம்.
உண்மையில் கர்மா என்பது வினைப்பயன். ஒருவர் செய்யும் செயலில் இருக்கும் நன்மை மற்றும் தீமையை பொறுத்தே இந்த கர்மா அமைகிறது. இதனை தீர்மானிப்பது தான் கர்ம வினையாகும். இதுவே கர்மா என்றும் சொல்லப்படுகிறது.
இந்த கர்மாவில் மூன்று பிரிவுகள் இருக்கிறது. அவை சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாமிய கர்மா.

சஞ்சித கர்மா சேமித்த வினைப்பயன், பிரார்த்த கர்மா நடக்கின்ற வினைப்பயன். ஆகாமிய கர்மா வரப்போகும் வினைப்பயன் என்று இந்த கர்மா மூன்று பிரிவுகளாக இருக்கிறது.
மனிதன் பலகோடி பிறவிகள் எடுக்கன்றான். அதில் நல்வினையும், தீவினையும் சேர்த்துக் கொடுப்பது தான் சஞ்சித கர்மா எனப்படுகிறது.
ஒவ்வொரு ஆன்மாவும் தனது போன ஜென்மத்தில் தான் நினைத்த செயல்களை செய்ய முடியாமல் போய்விட்டது என்றால், அதனை இந்த ஜென்மத்தில் செய்து முடித்துக் கொள்வது தான் பிரார்த்த கர்மா எனப்படுகிறது.
ஒவ்வொரு ஆத்மாவும் தற்போது இருக்கின்ற பிறவியில் சேர்த்துக்கொள்ளும் நல்வினை, தீவினைகளின் தொகுப்புதான் ஆகாமிய கர்மா எனப்படுகிறது.
-சிலர் தனக்கு நடக்கும் தீய வினைகளை நினைத்து புலம்பி கொண்டிருப்பார்கள். நான் யாருக்கும் எந்த பாவமும் செய்யவில்லையே, எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று.
ஆனால் எந்த செயலும் தற்செயலாக நடப்பதில்லை, நீங்கள் செய்த செயலால், உங்கள் விதியால் மட்டுமே இவை அனைத்தும் நடக்கிறது. நீ விதைத்த விதையை நீயே அறுவடை செய்வாய். எந்த அளவிற்கு இறைவனை கும்பிட்டாலும், நீ சேர்த்துள்ள வினைக்கு கர்மாவின் பலனை நிச்சயம் அனுபவித்து தான் ஆக வேண்டும்.
அடுத்தவரின் வாழ்க்கையை கெடுத்ததை நாம் மறந்தாலும், நமது கர்மா மறப்பதில்லை. நாம் மற்றவருக்கு செய்தும் தீமைகளின் கர்ம பலனை நிச்சயம் நமக்கு திருப்பி கொடுக்கிறது.
நீ ஒருவனை அழிக்க நினைத்தால் உன்னை அழிக்க ஒருவன் வந்து கொண்டிருப்பான். கர்மா என்பது பூமரங் போன்றது நீ எதை கொடுத்தாயோ, அது தான் உனக்கு திரும்ப கிடைக்கும்.
எனவே முடிந்த வரை நமது சிந்தனையும், செயலும் நல்லதாக இருக்க வேண்டும். நம்மால் முடிந்தவரை பிறருக்கு நன்மையை செய்ய வேண்டும், எவருக்கும் கெடுதல் நினைக்கக் கூடாது.
தொகுப்பு:காசி விஸ்வநாதன், திருநெல்வேலி

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *