• April 25, 2024

Month: May 2022

கோவில்பட்டி

கொள்முதல் நிறுத்தம்: தட்டுப்பாடு இன்றி பங்க்களில் பெட்ரோல், டீசல் வினியோகம்

மத்திய அரசின் கலால் வரி குறைப்பின் காரணமாக பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையை உடனே மாற்றியதால் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும், இந்த இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஈடு செய்ய வலியுறுத்தி இன்று(மே31) ஒருநாள் பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்வது நிறுத்தப்படுவதாக விற்பனையாளர் சங்கத்தினர் கூறி இருந்தனர். மேலும், கடந்த 2017 ல் இருந்து இதுவரை விளிம்பு தொகை உயர்த்தப்படவில்லை எனவும், அதை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் […]

செய்திகள்

6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற கொடூர தாய்

மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம், காரவலி கிராமத்தில் உள்ள 30 வயது பெண் ஒருவர் அங்குள்ள கிணற்றுக்குள் தனது 6 குழந்தைகளை அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளார். அலறியபடி தண்ணீருக்குள் விழுந்த அவர்கள் மூழ்கிய நிலையில், இதுகுறித்து அறிந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக விரைந்து சென்ற போலீசார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த குழந்தைகளை மீட்டனர்.ஆனால் அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.கிணற்றில் மூழ்கியவர்களில் 18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட ஐந்து […]

செய்திகள்

பஸ்சில் பாலியல் தொல்லை கொடுத்தவரை நடுரோட்டில் அடித்து உதைத்த பெண் பயணி

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பனமாரம் பகுதியை சேர்ந்த சந்தியா கடந்த ஞாயிற்றுக்கிழமை வெங்கப்பள்ளி நோக்கி செல்லும் பஸ்சில் பயணித்தார். அப்போது, படிஞ்சராதரா என்ற நிறுத்தத்தில் மது போதையில் பூவாழன் என்ற நபர் பஸ்சில் ஏறினார். மது போதையில் இருந்த பூவாழன் சந்தியா அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்தார்.பஸ் சென்றுகொண்டிருந்த சிறிது நேரத்தில் சந்தியாவுக்கு மதுபோதையில் இருந்த பூவாழன் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சந்தியா வேறு இருக்கைக்கு சென்று அமரும்படி பூவாழனிடம் கூறினார். ஆனால், […]

செய்திகள்

மதுரை- தேனி ரெயில் நேரத்தில் மாற்றம்

மதுரையில் இருந்து தேனிக்கு அகலப்பாதையில் 12 வருடங்களுக்கு பிற்கு கடந்த 26-ந் தேதி ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரெயில் மதுரையில் இருந்து தேனி செல்லும் பஸ் பயண நேரத்தை விட குறைவாகவும், கட்டணம் குறைவாகவும் உள்ளது.இந்த நிலையில், மதுரை – தேனி சிறப்பு ரெயில் நேரத்தில் நாளை (புதன்கிழமை) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06701) மதுரையில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 25 நிமிடங்கள் முன்னதாக காலை […]

செய்திகள்

மதுரையில் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்: 1,600 டன் குப்பை தேக்கம்

மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில் மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் என 6000-க்கும் மேற்பட்டோர் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர பணியாளர்களுக்கு 7 வது ஊதியக் குழு பணப் […]

செய்திகள்

ஒட்டகம் வாங்கி வந்து ஆற்று மணல் கடத்தியவர் கைது

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் பஸ் ஸ்டாண்டில் நேற்று இரவு காளையார்கோவில் போலீசார் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது மாட்டு வண்டியில் ஒட்டகத்தை கட்டி வருவதை பார்த்து சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.அப்போது நாட்டாறு ஆற்றில் இருந்து மணல் கடத்தி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் வண்டியில் வந்தவரை கைது செய்து மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மற்றும் ஒட்டகத்தை பறிமுதல் செய்து மறவமங்கலம் புறக்காவல் நிலையத்தற்கு கொண்டு சென்றனர்அவரிடம் நடத்திய விசாரனையில் அவர் சிவகங்கை மாவட்டம், […]

செய்திகள்

2 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு: கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த விவசாயி

ராதாபுரம் அருகே உள்ள வேப்பளங்குளத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 50). விவசாயி. இவர் இன்று நெல்லையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக இன்று காலை வந்தார்.பிரதான வாயில் வழியாக செல்லாமல் மற்றொரு பாதை வழியாக கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்ற அவர் திடீரென கையில் மறைத்து வைத்திருந்த விஷ பாட்டிலை எடுத்து குடித்தார். இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் ஓடி சென்று பாட்டிலை தட்டிவிட்டனர். பின்னர் […]

சினிமா

`டான்’ வெற்றி: சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டு

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 13-ந்தேதி வெளியான திரைப்படம் 'டான்'. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும் டான் படத்தில் சூரி, சமுத்திரக்கனி, விஜய் டிவி புகழ் சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை […]

கோவில்பட்டி

புகையிலை பொருட்களை காரில் கடத்தியவர் கைது

கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் நேற்று (29.5.2022) கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் விளாத்திகுளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அம்மாசி மகன் கார்த்திக்ராஜ் (33) என்பவர் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக காரில் […]

செய்திகள்

கட்டுரை போட்டி: கல்லூரி மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி இளம் செஞ்சிலுவை சங்கம் சார்பாக உலக ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு “தற்கால உணவு முறையும் ஆரோக்கியமும்” என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடைபெற்றது.போட்டியில் பங்கேற்ற மாணவிகளின் படைப்புகளை நடுவர் குழுவினர் ஆய்வு செய்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி சான்றிதழ்கள் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார். இளம் செஞ்சிலுவை சங்கம் ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். நர்கீஸ் பேகம் உள்பட பலர் கலந்து […]