முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை வந்தார்; நாளை நடக்கும் திமுக பொதுக்குழுவில் பங்கேற்கிறார்
ஆளுங்கட்சியான தி.மு.க. மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நடத்த இருக்கிறது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடக்கிறது. பொதுக்குழு கூட்டத்தில், 6 ஆயிரத்து 500 பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்க இருக்கின்றனர். 2026 சட்டசபை தேர்தலை முன்னிறுத்தி நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது. தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் […]







