தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க ஐகோர்ட்டு தடை விதித்தது. அந்த தடையை நீக்கக்கோரி முதல் அமைச்சர் விஜய் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு, தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பு கூறுகையில், “இடைத்தேர்தல் அறிவிக்காதது நிரந்தரமானதல்ல. வழக்கை ஐகோர்ட்டு முடித்ததும் தேர்தல் நடத்தப்படும். […]
கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் அக்டோபர் 6 ந் தேதி ஏற்றுமதி – இறக்குமதி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடக்கிறது. உள்ளூரில் தயாரிப்போம்… உலகிற்கு ஏற்றுமதி செய்வோம்!” என்ற கோஷத்துடன் நடைபெறும் இந்த கருத்தரங்கில் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பிளாஸ்டிக் தயாரிப்புகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் பற்றி அலசி ஆராயப்படுகிறது. கருத்தரங்கில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) தொழில் முனைவோர் […]
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்கத் தேவையான 118 தொகுதிகள் கிடைக்காத நிலையில், 107 தொகுதிகளில் வெற்றி பெற்ற த.வெ.க. கூட்டணி ஆட்சியை அமைத்தது. இவா்களுக்கு திமுக கூட்டணிகள் இடம் பெற்றிருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தன. தற்போது மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. […]
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கங்கா பரமேஸ்வரி காலனியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 57) என்பவரது வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த 23 1/2 பவுன் தங்க நகைகள் திருட்டு போயின. கடந்த 2025ம் வருடம் நடந்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் பாண்டியன் (38) மற்றும் தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த சத்தியசீலன் மகன் பேரின்பநாதன் (22) ஆகிய இருவரையும் சிப்காட் காவல் நிலைய போலீசார் […]
கோவில்பட்டி அருகே உள்ள சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பு முகாம் செப்டம்பர் 26 தொடங்கி நடைபெற்று வருகிறது. முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியரும் முகாம் தலைவருமான நாகலிங்கம் தலைமை தாங்கினார். உதவித் தலைமை ஆசிரியர் கோச்சிமின் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கோவில்பட்டி முத்தமிழ் மன்ற அறக்கட்டளைச் செயலாளரும் நன்னெறி ஆசிரியருமான பிரபு, “போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகளும் சமூகச் சீரழிவுகளும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதனைத் […]
நெல்லை டவுன் மணிப்புரம் பகுதியை சேர்ந்தவர் டால்டன் (வயது 76). இவருக்கு நிக்கோலஸ் ராஜரத்தினம்(78) உள்பட 3 சகோதரர்கள் உள்ளனர்.இவர்கள் அனைவருமே குவைத்தில் வேலைபார்த்துவிட்டு தற்போது சொந்த ஊர் திரும்பியவர்கள். இவர்கள் 4 பேரும் மணிப்புரம் பகுதியில் ஒரே காம்பவுண்டுக்குள் தனித்தனியே வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். டால்டன் அப்பகுதியில் பெட்ரோல்பங்க் நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகே மணிப்புரத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 40) என்பவருக்கு சொந்தமான குடும்ப கோவில் உள்ளது. அந்த கோவில் அருகே […]
கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தின் கிளை பங்கான புதுக்கிராமம் பரிசுத்த செல்வ மாதா ஆலய திருவிழா கொடியேற்றம் இன்று 29-ந் தேதி மாலை நடைபெற்றது. ஆலய பங்கு தந்தை அருள்ராஜ் அடிகளார், உதவி பங்குதந்தை குழந்தைராஜ் அடிகளார், குறுக்குச்சாலை பங்கு தந்தை சுரேஷ்பாபு அடிகளார் இணைந்து திருவிழா கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினார்கள். பின்னர் திருவிழா தொடங்கி தொடர்ந்து பத்து நாட்கள் ஆலயத்தில் திருப்பலிகளும்,தியானம்,ஒப்புரவு அருட்சாதனம் மற்றும் பல நிகழ்வுகளுடன் திருவிழா நடைபெறும். இதில் ஒன்பதாம் நாள் […]
பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் ; தூத்துக்குடி விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம்
தூத்துக்குடி ஏவிஎம் கமலவேல் மண்டபத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 31-வது மாநில மாநாடு கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. மாநாட்டின் இறுதி நாளான இன்று நடைபெற்ற நிகழ்வில், விவசாயிகள் சங்க அகில இந்தியத் துணைத் தலைவர் சண்முகம், சி.ஐ.டி.யு.மாநிலப் பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் விவசாயிகள் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து, விவசாயிகள் சங்க அகில இந்தியத் துணைத் தலைவர் ஹன்னன் முல்லா சிறப்புரையாற்றி மாநாட்டை நிறைவு செய்து வைத்தார். […]
கோவில்பட்டி அருகே ஆவல் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து ( வயது 61). கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். அவள் நத்தம் இடத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது கங்கை கொண்டாடினில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி சென்ற லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்து மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்த கோவில்பட்டி கிழக்கு பொடுசா நேரில் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த […]
தமிழகத்தில் மகளிர் பயணம் என்ற பெயரில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக செல்லும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 2-ந்தேதி முதல் (காந்தி ஜெயந்தி) இந்த திட்டம் ‘வெற்றிப்பயணம்’ என்ற பெயரில் விரிவுபடுத்தப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார். அதன்படி, மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் மற்றும் புறநகர் சாதாரண அரசு பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய சாதாரண அரசு பஸ்களிலும் இலவசமாக […]







