தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டின் வளர்ந்துவரும் பொருளாதாரம் மற்றும் அதிகரித்துவரும் மின் நுகர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு மற்றும் மின் விநியோகத் துறைகளில் விரிவான மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த மின்கட்டமைப்பு அவசியமாகிறது. மின் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சென்னை போன்ற […]
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 320 வெளிநாட்டினர் உள்பட 2,502 பேரை காணவில்லை என்பதால் அங்கு சோகமும் பதற்றமும் நிலவி வருகிறது. திபெத் எல்லையையொட்டிய நேபாள பகுதியில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட பனிச்சரிவால் போடேகோஷி நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் நீர்மின் நிலையங்கள், பாலங்கள், சாலைகள், வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. 8 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புகழ்பெற்ற ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறுகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதய மாா்த்தாண்ட அபிஷேகத்தைத் தொடா்ந்து, காலை 5.15 மணிக்கு திருவிழா கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து இன்று மாலை அப்பா் சுவாமிகள் கோவிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு வீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சி, இரவு ஸ்ரீபெலி […]
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்குப் பாத்தியப்பட்டபத்திரகாளியம்மன் கோவில் வருடாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10. மணிக்குள் நடைபெற்றது, இதையொட்டி பக்தர்கள் திரண்டிருந்தனர், குறிப்பிட்ட நேரத்தில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம்,\ நடைபெற்றது. மேலும் மகா கணபதி ஹோமம், சக்தி ஹோமம்,பரிவார மூர்த்திகளுக்கு மூலமந்த்ர ஹோமம், அஸ்திர ஹோமம், திரவ்யாகுதி, பூரணாகுதி, அபிஷேகம் கும்பங்கள் எழுந்தருளல், விமான கோபுரங்கள் அபிஷேகம், மூலஸ்தான கும்ப அபிஷேகம். தீபாராதனை, பிரசாதம் வழங்குதல். நடந்தது. பக்தர்கள் காணிக்கையாக […]
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “சட்டமன்றத்தில் ஒரு அமைச்சர், ரேஷன் அரிசியில் மக்கள் சோறாக்கி சாப்பிடுவது இல்லை என்றும், ஆடு, மாடு, கோழிக்குதான் போடுகிறார்கள் என்றும் கூறுகிறார். மற்றொரு அமைச்சர், ரேஷன் அரிசியை மக்கள் இட்லி, தோசைக்கு மாவு அரைத்துதான் சாப்பிடுகிறார்கள் என்று சொல்கிறார். இட்லி, தோசை எல்லாம் உணவு கணக்கில் வராதா? சாப்பிடும் வகையில் இருந்தால் மக்கள் […]
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால், த.வெ.க.வுக்கு ஆட்சி அமைக்க தேவையான 118 தொகுதிகளில் வெற்றி கிடைக்கவில்லை. த.வெ.க.வுக்கு 107 இடங்களிலேயே வெற்றி கிடைத்த நிலையில், காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி […]
கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி சார்பில் தென்மண்டல அளவிலான பெண்கள் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையிலான ஆக்கி போட்டி கடந்த 28 ந் தேதி தொடங்கியது. இன்று 3வது நாளாக கோவில்பட்டி செயற்கை புல் ஆக்கி மைதானம் மற்றும் வேல்ஸ் பள்ளி மைதானத்திலும் போட்டிகள் நடந்தன. காலை 6.30 மணி அளவில் வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் கோபிசெட்டிபாளையம் சாரதா பள்ளி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை ஐ சி எப் பள்ளியை வெற்றி பெற்றது . […]
கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. அதிகாலையில் அன்னை ஆதிபராசக்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் மகளிர் 108, 1008 தமிழ் மந்திரங்கள் கூறி குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், தீப்பெட்டி தொழில் சிறக்கவும், அனைத்து மக்களும் நலமுடன் வாழவும் அன்னையிடம் வேண்டி 1008 கஞ்சிக்கலயம், 27 அக்கினிசட்டி, 54 முளைப்பாலிகை ஏந்தி ஆன்மிக ஊர்வலம் நடைபெற்றது. ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை […]
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆறுமுகநகர் பகுதியில் சேகர் என்பவர் வீட்டின் கதவை உடைத்து 16½ பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். கடந்த 13.8.2026 அன்று நடைபெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக கழுகுமலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது பற்று வழக்குபதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் (26) […]
கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக்குளத்தை சேர்ந்தவர் செல்வம் (46). பிரபல ரவுடியான இவர் மீது குமரி மற்றும் தூத்துக்குடி தாளமுத்துநகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. செல்வத்திற்குச் சொந்தமான தோட்டம் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே சங்கனேரி கிராமத்தில் அமைந்துள்ளது. சம்பவத்தன்று தனது தோட்டத்திற்குச் சென்ற செல்வத்தை மர்ம நபர்கள் சிலர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். […]







