கழுகுமலையில் வீட்டின் கதவை உடைத்து 16½ பவுன் தங்க நகைகள் திருடிய 2 பேர் கைது
Oplus_16908288
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆறுமுகநகர் பகுதியில் சேகர் என்பவர் வீட்டின் கதவை உடைத்து 16½ பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கடந்த 13.8.2026 அன்று நடைபெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக கழுகுமலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது பற்று வழக்குபதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் (26) மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசன் (30) ஆகிய இருவரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் தேடி கண்டுபிடித்து கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து திருடப்பட்ட 16½ பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை மீட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் சட்டப்படி தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது







