கோவில்பட்டியில் பெண்கள் சி. பி. எஸ். இ. பள்ளி ஆக்கிப்போட்டி: 2-வது நாள் வெற்றி பெற்ற அணிகள் விவரம்
Oplus_16908288

கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி சார்பாக தென்மண்டல அளவிலான பெண்கள் CBSE பள்ளிகளுக்கு இடையிலான ஆக்கிப்போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
போட்டிகள் அனைத்தும் நாக்அவுட் முறையில் நடத்தப்பட்டு அரை இறுதிக்கு தகுதி பெறும் நான்கு அணிகளுக்கு லீக் முறையில் நடத்தப்பட்டு முதல் நான்கு இடங்களை தீர்மானிக்கப்படும் இந்த போட்டியில் மொத்தம் 26 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

இன்று 29 8 2026 இரண்டாவது நாள் போட்டியில் கோவில்பட்டி செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் மேட்டுப்பாளையம் எஸ்.ஜே என் பள்ளி 3-1 என்ற கோல் கணக்கில் ஈரோடு அதயான பள்ளியை வெற்றி பெற்றது அரியலூர் ராம்கோ பள்ளி 6- 0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் பப்ளிக் ஸ்கூல் அணியை வெற்றி பெற்றது
மாலையில் நடைபெற்ற 19 வயதுக்குடோருக்கான லீக் போட்டியில் சென்னை வேலம்மாள் பள்ளி 6-0 என்ற கோல் கணக்கில் நெய்வேலி ஜவகர் அணியை வெற்றி பெற்றது.
கடைசி லீக் போட்டியில டெல்லி பப்ளிக் ஸ்கூல், ஹைதராபாத் 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை பி எஸ் பி பி அணியினரை வெற்றி பெற்றனர்.
மற்றொரு மைதானமான வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் நடைபெற்ற ஆக்கி போட்டியில் 14 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் சென்னை ஐ சி எப் பள்ளியும் சென்னை பி எஸ் பி பி பள்ளி இடையிலான போட்டியில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவு பெற்றதால் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவது போட்டியில் கோபிசெட்டிபாளையம் சாரதா பள்ளி 3-0 என்ற கோல் கணக்கில் அம்பாசமுத்திரம் வேல்ஸ் வித்யாலயா பள்ளி அணியை வெற்றி பெற்றது
மூன்றாவது போட்டியில் மேட்டுப்பாளையம் எஸ் ஜே என் பள்ளி 7-0 என்ற கோல் கணக்கில் அரியலூர் ராம்கோ பள்ளியை வெற்றி பெற்றது.

நான்காவது போட்டியில் கோபிசெட்டிபாளையம் சாரதா பள்ளி 5-0 என்ற கோல் கணக்கில் சென்னை பி எஸ் பி பி அணியினரை வெற்றி பெற்றனர்
17 வயதுக்குட்பட்டருக்கான முதல் போட்டியில் ஈரோடு அதயான பள்ளி 7-0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் பப்ளிக் பள்ளியை வெற்றி பெற்றது
இரண்டாவது ஆட்டத்தில் அம்பாசமுத்திரம் வேல்ஸ் வித்யாலயா பள்ளி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை ஐ சி எப் அணியை வெற்றி பெற்றது







