டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட பல்வேறு வகையான காய்ச்சல்கள் அதிகமாக பரவி வரும் சூழலில், இதுபோன்ற காய்ச்சல்கள் பரவுவதை தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கிலும் தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கசாயம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, த.வெ.க., தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் ஏற்பாட்டில், கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம்,, இனாம்மணியாச்சி பஸ் நிறுத்தம், அரசு ஆஸ்பத்திரி, தெற்கு திட்டங்குளம் பஸ் நிறுத்தம்,, […]
கோவில்பட்டியில் நடிகர் சிவாஜி கணேசனின் 98 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மன்றம் மற்றும் இளைய திலகம் பிரபு மன்றம் சார்பில், கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு தேவர் சிலை அருகே நடந்த நிகழ்ச்சிக்கு சிவாஜி மன்ற தலைவர் சுப்புராயலு தலைமை தாங்கினார். மன்ற துணைத் தலைவர் சின்னகொம்பையா, பிரபு மன்ற தலைவர் ஆறுமுகபாண்டி, செல்வராஜ், வேலுச்சாமி, ராஜசேகரன், தர்மர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட […]
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ், 4.425 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது,. கஞ்சா வேட்டையில் சிறப்பாக பணியாற்றிய உதவி ஆய்வாளர். ஐ. முத்துராஜா, தலைமைக் காவலர். தா. ஜான் அந்தோணி ராஜ், முதல் நிலைக் காவலர்கள். ஜே. ஜோசப்,. ப. தினேஷ்குமார் மற்றும் காவலர். ரா. சக்தி ராஜேந்திரன் ஆகியோர் [பாராட்டப்பட்டனர் இன்று (1.10.2026) திருநெல்வேலி சரக போலீஸ் டி.ஐ.ஜி, இரா. திருநாவுக்கரசு, சரக அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, […]
தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் மகளிர் விடியல் பயண திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் சாதாரண நகர அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வசதி இருந்து வருகிறது. தற்போது, தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு, இந்த திட்டத்தின் பெயரை வெற்றிப் பயணத் திட்டம் என்று மாற்றியதுடன், சாதாரண நகர பஸ்களையும் தாண்டி, எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசு பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், காந்தி ஜெயந்தி […]
தூத்துக்குடி மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான முதலமைச்சர் கோப்பை தடகளப் போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மைதானத்தில் நடைபெற்றன. கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு படிக்கும் உடற்கல்வித்துறை மாணவி சரண்யா, 200 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம், 100 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்து ரொக்கப் பரிசு ரூ 5000 வென்றார். மேலும், இரண்டாம் ஆண்டு உடற்கல்வித்துறை மாணவர் துரைராஜ், 1500 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடமும், […]
தஞ்சாவூர் மாவட்டம் கீழ்வாசல் பகுதியில் தடைசெய்யப்பட்ட கிலாபத் இயக்கத்தில் ஆள் சேர்த்து விடுவதாகக் கூறி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் மூலம் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதி மன்றத்தில் அனுமதி பெற்று, சிறப்பு புலனாய்வு போலீசார் சார்லஸ் தலைமையில் கடந்த 29-ந்தேதி தஞ்சாவூரில் 6 இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். கிலாபத் இயக்கத்தில் இருப்பதாக சந்தேகித்து தஞ்சாவூர் கீழ்வாசல் பகுதியை சேர்ந்த சாஹிர் உசேன்,அப்துல் வர்கீஸ், உமர் முக்தார், யாசர் அப்துல், சம்சுதின், ஷேக் பரீத் […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- “மதுராந்தகத்தில் தவெகவினர்தான் ஓட்டுக்கு அதிக பணம் கொடுக்கின்றனர். நாங்கள் அங்கு பிரசாரத்துக்கு சென்றபோது நோட்டீஸ் கொடுத்து வாக்கு கேட்டோம். அப்போது ‘எல்லோரும் பணம் கொடுக்கிறார்கள், நீங்கள் பணம் கொடுக்கவில்லையே.. ‘ என்று சில கிராம மக்கள் என்னிடம் கேட்டார்கள். எந்தெந்த கட்சி எல்லாம் பணம் கொடுத்தார்கள் என்று கேட்டபோது, தவெகவினர்தான் ஓட்டுக்கு அதிக பணம் கொடுத்ததாகச் சொன்னார்கள். தூயசக்தி, நாங்கள் ஓட்டுக்கு எல்லாம் பணம் […]
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி ரூ.100 கோடி மோசடி நடந்துள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தி.மு.க. பிரமுகர் அரசகுமார் என்பவரும், அவருடைய உறவினர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதும் போலீசார் குற்றம்சுமத்தி உள்ளனர். அவர் தொடர்பான வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடந் தது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை நேரில் […]







