157-வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து சிலைக்கு அமைச்சர் ஸ்ரீநாத் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி மக்களின் தந்தை எனப் போற்றப்படும் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து 157-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, இன்று (15.11.2026) தமிழ்நாடு அரசு சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். பூங்கா அருகில் அமைந்துள்ள ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பேசுகையில், குரூஸ் பர்னாந்தின் வாழ்க்கை மற்றும் தூத்துக்குடிக்கு அவர் ஆற்றிய வரலாற்றுச் சாதனைகளை நினைவுகூர்ந்தார்
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் பிரியங்கா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பணராஜவேல், தூத்துக்குடி வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.







