• November 15, 2026

கோவில்பட்டியில் குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்

 கோவில்பட்டியில் குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்

Oplus_16908288

கோவில்பட்டியில் கி.ரா.நினைவரங்கத்தில் சங்கர வள்ளிநாயகம் அறக்கட்டளை மற்றும் இலக்கியச் சாரல், கோவில்பட்டி இசை எப்.எம் இணைந்து குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம் நடத்தின.

திருமலை முத்துச்சாமி தலைமை தாங்கினார். இயக்குனர் இந்திராணி முன்னிலை வகித்தார்,  உதவி தலைமையாசிரியர் முருக சரஸ்வதி வரவேற்று பேசினார். 

நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களின் வில்லுப்பாட்டு  நடைபெற்றது. இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாகலாபுரம் புதூர் மாணவர் சர்வேஷ்னின் திருக்குறள் ஒப்புவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற இராசு, கோவில்பட்டி இசை எப்.எம். கோ.சுரேஷ்குமார், தபால் துறை அலுவலர் தவமணி (ஓய்வு )மற்றும் சிறைக் காவலர் ராஜாராம் (ஓய்வு,) சாந்திப்பொருமாள்,  டாக்டர் சுரேஷ், விரிவுரையாளர் கனகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விரிவுரையாளர் ராஜலட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இலக்கியச் சாரல் நிறவனர் தினகரன் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். சங்கர வள்ளிநாயகம் அறக்கட்டளை நிறுவனர் திருமலை முத்துச்சாமி குழந்தைகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *