• April 27, 2024

Month: August 2023

கோவில்பட்டி

கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வேண்டும்; கோரிக்கை வலுக்கிறது

கோவில்பட்டியில் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், நீதித்துறை நடுவர் மன்றங்கள், விரைவு நீதிமன்றம் ஆகியவை செயல்படுகின்றன. இங்கு சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார்  வக்கீலாக பணியாற்றிய வரலாற்று சிறப்பும் உண்டு. தற்போது இந்த நீதிமன்றங்கள் பழமையான கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. 300 வக்கீல்கள் தொழில் செய்ய்து வரும் நிலையில், நீதிமன்றத்தில் சிலருக்கு மட்டுமே அமரும் நிலையும், வழக்காடிகள் நீதிமன்றத்துக்கு வெளியில் காத்திருக்கும் நிலையும் தொடர்கிறது. எனவே, கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க […]

செய்திகள்

தி.மு.க.விற்கும், கொடநாடு குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம்? டி.ஜெயக்குமார் கேள்வி

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனை  அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள்  அமைச்சருமான டி.ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் இன்று சந்தத்தினர், அப்போது சத்துணவு திட்டத்தை மறைத்து இந்த அரசு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளது, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் செயல்படுத்த வேண்டும் என்று கோரி ஒரு மனு அளிக்கப்பட்டது.  பின்னர்  முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-  எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை மழுங்கடிக்க வேண்டும் என்பதற்காக இந்த அரசு காலை சிற்றுண்டி […]

செய்திகள்

மூப்பனார் நினைவிடத்தில் என்.ஆர்.தனபாலன் மரியாதை

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் ஜி கே மூப்பனார் 22 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், த மா க.தலைவர் ஜி கே வாசன் முன்னிலையில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசினார். பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில தலைமை நிலையசெயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம் […]

கோவில்பட்டி

மண்டல கால்பந்து போட்டி: காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி பள்ளி அணி

கோவில்பட்டி காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் மண்டல அளவிலான கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கு பெற்றன. இறுதிப் போட்டியில் காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி மற்றும் இசக்கி வித்யாஷ்ரம் தென்காசி அணிகள் மோதின.  இரு அணிகள் இடையேயான ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. போட்டி நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் ஏதும் போடவில்லை. அந்த அளவுக்கு போட்டி மிகவும் கடுமையாக இருந்தது.  இறுதியில் பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. […]

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே கடற்கரை பகுதியில் கடல்நீர் சாகச விளையாட்டுகள்; அமைச்சர்கள் நேரில் ஆய்வு

தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு கடற்கரைப் பகுதியில் கடல்நீர் சாகச விளையாட்டுகள் தொடங்குவது குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் , தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் இன்று கள ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி சார் ஆட்சியர் கவுரவ்குமார், சுற்றுலா வளர்ச்சிக் கழக மதுரை மண்டல மேலாளர் டேவிட் பிரபாகரன், சுற்றுலா அலுவலர் […]

கோவில்பட்டி

இந்திய கம்யூனிஸ்டு நூதன போராட்டம்

கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தல் கிராமத்தில் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தாசில்தாரிடம் பலமுறை மனு கொடுத்தும் பலன் இல்லாததால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தபட்டது. பின்னர் ஆட்சியரை சந்தித்து முறையிட்டதன்பெரில் தகுதியான நபர்களை தேர்வு செய்து அறிக்கை கொடுக்கும்படி உத்தரவிட்டும் இன்றுவரை யாருக்கும் இலவச வீட்டுமனை பட்டா கிடைக்கவில்லை. இதனால் கோவில்பட்டி தாலுகா இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று காலை நூதன போராட்டம் நடத்தப்பட்டது. இ.எஸ்.ஐ.,மருத்துவமனை முன்புறம் தாலுகா […]

கோவில்பட்டி

ஐ.சி.எம். நடுநிலைப்பள்ளியில்  `நிழல் இல்லா அதிசய நாள்’ செயல் விளக்கம் 

நிழல் இல்லா நாள் என்பது ஒரு அரிய வான்நிகழ்வு, நண்பகலில் சூரியன் நேரடியாக தலைக்கு மேல் இருக்கும் போது வருடத்திற்கு இரண்டு முறை நிகழும் நிகழ்வாகும். 23.5 டிகிரி வடக்கு அட்சரேகைக்கும் 23.5 டிகிரி தெற்கு அட்சரேகைக்கும் இடைப்பட்ட கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட இடங்களில் நிகழ்கிறது. கோவில்பட்டியில் ஆகஸ்ட் 29 (இன்று) நிழல் இல்லா நாளாகும். இதையொட்டி கோவில்பட்டி ஐ.சி.எம். நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், மாணவ மாணவிகள் வட்டமாக நின்றும், தரையில் குச்சியை ஊன்றியும் நிழல் […]

கோவில்பட்டி

கல்வி மாவட்ட அளவில் விளையாட்டு போட்டி; கோவில்பட்டி கம்மவார் பெண்கள் பள்ளி `சாம்பியன்

கோவில்பட்டி கே. ஆர். நகர் நேஷனல் இன்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் கல்வி மாவட்ட அளவில் 14 முதல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தடகள மற்றும் குழுப் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கோ-கோ, கபடி, பூப்பந்து போட்டியில் முதலிடமும், 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் உயரம் தாண்டுதலில் மாணவி ஜோஸ்லின் ஹெரிஷா முதலிடம், மாணவி அர்ச்சனா 1,500 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம், மாணவி நிவேதா குண்டு எறிதல் மற்றும் […]

ஆன்மிகம்

எலியாக பிறந்து சக்கரவர்த்தியாக உயர்ந்த மகாபலியின் கதை…

உலகையே உங்கள் பாதங்களால் அளக்கும் பரந்தாமனே! உங்களுக்கு என்னையே தருகிறேன். மூன்றாவது அடியை என் தலையில் வைத்து அளந்துகொள்ளுங்கள் என்று சொல்லி சிரம் தாழ்த்தி நின்றார் மகாபலி. அவரது தலையில் தன் பாதத்தை வைத்து அழுத்தி பாதாள லோகத்துக்கு அனுப்பினார் மகாவிஷ்ணு. மகாபலியின் தியாகம் அந்த பரந்தாமனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆண்டுதோறும் ஒருநாள் மக்களை காண மகாபலிக்கு அனுமதி அளித்தார். ஓணம் பண்டிகை நாளில் மக்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியோடு தங்களை காண வரும் சக்கரவர்த்தி மகாபலியை வரவேற்கின்றனர்! […]

கோவில்பட்டி

தூத்துக்குடி, தென்காசி மாவட்ட நிர்வாகங்களை கண்டித்து கோவில்பட்டியில் 5வது தூண் அமைப்பு சார்பில்

கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள அப்பனேரி உள்பட 12 ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டத்தில் இணைக்க வலியுறுத்தியும், 12 ஊராட்சிகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் தூத்துக்குடி, தென்காசி மாவட்ட நிர்வாகங்களை கண்டித்தும் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் 5வது தூண் அமைப்பு சார்பில் படையல் போட்டு போராட்டம் நடைபெற்றது.இரண்டு மாவட்ட நிர்வாகங்களை கண்டித்து மாரடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 5வது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள் மாரிமுத்து, […]