• April 27, 2024

Month: March 2023

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 4-ந் தேதி மது விற்பனைக்கு தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஏப்.4ஆம் தேதி  மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஏப்.4ஆம் தேதி தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை / பார்) விதிகள், 2003 விதி 12 துணை விதி இணைந்த பார்கள் மற்றும் எப்.எல்2/எப்.எல்.3 (1)-இன் படி அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபானக்கடைகளுடன் உரிமதலங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.  […]

செய்திகள்

மணப்பாறை முறுக்கு உள்பட மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு உறுதி

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், மயிலாடுதுறை மாவட்டம் தைக்கால் பிரம்பு வேலைப்பாடு உள்பட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், புவிசார் குறியீடு பொருட்களை பதிவு செய்யும் அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞருமான சஞ்சய்காந்தி கூறினார். இது தொடர்பாக அவர் இன்று தஞ்சையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான சட்டம் இயற்றப்பட்டு 20 ஆண்டுகள் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்-பூவனநாதசுவாமி கோவில் பங்குனி பெருந்திருவிழா 5-ந்தேதி தொடக்கம்

பிரசித்தி பெற்ற கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவணநாத சுவாமி கோவில் பங்குனி பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம், கோவில்பட்டியில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் மிகவும் முக்கிய திருவிழாவாக கருதப்படும் பங்குனி பெருந்திருவிழா இந்த ஆண்டு வருகிற 5-ந்தேதி புதன்கிழமை தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறுகிறது,. ஒவ்வொரு நாளும் கோவிலில் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெறும்.கோவில் மைதானத்தில் பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய இருக்கும். ராட்டினங்கள்மற்றும் திடீர் கடைகள் அமைக்கும் பனி நடைபெற்று […]

செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு வழக்கு 3-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

.அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஐகோர்ட்டில் உடனடியாக மேல்முறையீடு செய்தனர். இதில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு மட்டும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரது மேல்முறையீட்டு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு  மாற்று திறனாளிகள் முற்றுகை போராட்டம்

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது 3 சக்கர ஸ்கூட்டர்களில் தாலுகா அலுவலகத்துக்கு நேற்று காலையில் வந்தனர். மண்டல தலைவர் பேர்சில் தலைமையில் தங்களது வாகனங்களுடன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, ராமகிருஷ்ணன், செண்பகவல்லி, சிவசேனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அவர்களை தாசில்தார் சுசிலா மற்றும் போலீசார் சமரசம் செய்து வைத்தனர், போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகளிடம் தாசில்தார் சுசிலா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாற்றுத் […]

கோவில்பட்டி

சிறுநீரகங்கள் செயல் இழந்து உயிருக்கு போராடும் கோவில்பட்டி இளைஞர் ; அரசின் உதவிக்காக

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமம் 4வது தெருவைச் சேர்ந்த பால்ராஜ்-முத்துமாரி. தம்பதியர் தீப்பெட்டி ஆலை தொழிலாளர்கள். இந்த தம்பதிக்கு சிவக்குமார் என்ற மகனும், செண்பகவல்லி என்ற மகளும் உள்ளனர். சிவக்குமார் கடந்த 2017ம் ஆண்டு கோவில்பட்டி ஜி.வி.என் கல்லூரியி;ல பி.காம் படித்த முடித்து விட்டு திருப்பூரில் நூல் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இதையெடுத்து கடந்த 2019ம் மலேசியாவிற்கு சென்று அங்குள்ள ஓட்டல் மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்துள்ளார். அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 2021ம் ஆண்டு […]

கோவில்பட்டி

ஓட்டப்பிடாரத்தில், குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

தமிழ்நாடு அரசின் சமுக பாதுகாப்புத்துறை மூலமாக தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது, ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் தலைமை தாங்கினார். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் வண்கொடுமை குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குழந்தை பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.. இந்நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் அனிதா, யூனியன் ஆணையாளர் .சிவபாலன்மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர்கள், […]

ஆன்மிகம்

பங்குனி உத்திரம் வரலாறு

பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் வரும் நாள், பங்குனி உத்திரமாகக் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார். குதிரைகள் பூட்டிய தேரில் முருகப் பெருமானுக்கு வாயு பகவான் சாரதியாக இருக்க, முருகனின் படைகள் அணிவகுத்து சென்றன. அப்போது, வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. காரணம் அறியாது அனைவரும் திகைத்து நிற்க, அங்கிருந்த நாரதர் அம்மலையை […]

தூத்துக்குடி

போலீசாருக்கு மனஅழுத்த மேலாண்மை, போக்சோ சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு  மன அழுத்த மேலாண்மை பயிற்சி மற்றும் போக்சோ சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவுப்படி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. முதற்கட்டமாக தூத்துக்குடி, தூத்துக்குடி ஊரகம் மற்றும் விளாத்திக்குளம் ஆகிய உட்கோட்டங்களைச் சேர்ந்த போலீசாருக்கு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தொடக்கி வைத்தார், அப்போது அவர் பேசியதாவது:- பொதுமக்களிடம் காவல்துறையினர் அன்பாகவும், கனிவாகவும் எவ்வித பாரபட்சமும் இல்லாமல் […]

ஆன்மிகம்

முப்பிலிவெட்டி மயிலேறும் பெருமாள் அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன்  கோவில் பங்குனி உத்திரம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் தாலுகா  முப்பிலிவெட்டி கண்மாய்க் கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பூர்ணாதேவி, புஷ்கலா தேவி சமேத மயிலேறும் பெருமாள் அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவில் பங்குனி உத்திரம் திருவிழா வழக்கம் போல் இந்த ஆண்டும் இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 5 மற்றும் 6-ந்தேதிகளில் விழா நடக்கிறது.5 ந்தேதி காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது. 9 மணிக்கு இந்து நாடார் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் நடக்கிறது. […]