சிறுநீரகங்கள் செயல் இழந்து உயிருக்கு போராடும் கோவில்பட்டி இளைஞர் ; அரசின் உதவிக்காக காத்திருக்கும் பெற்றோர்

 சிறுநீரகங்கள் செயல் இழந்து உயிருக்கு போராடும் கோவில்பட்டி  இளைஞர் ; அரசின் உதவிக்காக காத்திருக்கும் பெற்றோர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமம் 4வது தெருவைச் சேர்ந்த பால்ராஜ்-முத்துமாரி. தம்பதியர் தீப்பெட்டி ஆலை தொழிலாளர்கள். இந்த தம்பதிக்கு சிவக்குமார் என்ற மகனும், செண்பகவல்லி என்ற மகளும் உள்ளனர்.

சிவக்குமார் கடந்த 2017ம் ஆண்டு கோவில்பட்டி ஜி.வி.என் கல்லூரியி;ல பி.காம் படித்த முடித்து விட்டு திருப்பூரில் நூல் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இதையெடுத்து கடந்த 2019ம் மலேசியாவிற்கு சென்று அங்குள்ள ஓட்டல் மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்துள்ளார்.

அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 2021ம் ஆண்டு நாடு திரும்பியுனார். பின்னர் கோவில்பட்டியில் பெயிண்டர் வேலைக்கு சென்றார். சிவக்குமாருக்கு அடிக்கடி வாந்தி ஏற்பட்டு வந்தது.. இதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென கண்பார்வை மங்கி விடுவே, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிவக்குமாரின் ஒரு சிறுநீரகம் முழுவதுமாக பாதிப்படைந்து விட்டதாகவும், மற்றொரு சிறுநீரகம் 25 சதவீதம் மட்டும் தான் செயல்பாட்டில் உள்ளது. அதுவும் ஒருசில மாதங்களில் செயல் இழந்து விடும் நிலையில் இருப்பதாக கூறியதும் சிவக்குமார் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையெடுத்து சிவக்குமார் தாய் முத்துமாரி தன்னுடைய மகனுக்கு சிறுநீரகம் கொடுக்க முன் வந்துள்ளார். ஆனால் அரசு விதிமுறைப்படி தான் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய முடியும் என்றும், இன்னும் ஒரு ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அரசு மருத்துவமனையில் கூறியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து சிவக்குமார் குடும்பத்தினர் தனது மகனை காப்பற்ற தனியார் மருத்துவமனைகளை நாடியுள்ளனர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய 7 லட்சம் வரை செலவாகும் என்று தெரிவித்துள்ளனர். அன்றாடம் தீப்பெட்டி வேலை பார்த்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தினை நடத்தி வருபவர்கள் வேறுவழியில்லமால் நகைகளை விற்று, வெளியே கடன் வாங்கி மருத்துவ செலவு செய்து வருகின்றனர். மேலும் சிவக்குமார் பயின்ற கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி நண்பர்கள், உறவினர்கள் என ஒரு லட்சம் வரை பணம் திரட்டி உதவி செய்துள்ளனர்.

தனது மகன் படித்து முடித்து வேலைக்கு சென்றதும் தங்களது கஷ்டம் தீர்ந்து விடும் என்று காத்திருந்த சிவக்குமார் பெற்றோர்களுக்கு அவருக்கு சிறுநீரகங்கள் செயல் இழப்பு என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய முடியாத என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் சிவக்குமார் குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர்.

எனவே தங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும், முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையை சேர்க்க வேண்டும் என்று சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *