• November 1, 2024

Month: August 2024

செய்திகள்

அமெரிக்காவில் ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை  முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்

உலக நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்ய வைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 27-ந் தேதி சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார்.அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை சென்றடைந்த அவர், முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றார். இதனை தொடர்ந்து, பல்வேறு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழகத்தில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒரே நாளில் ரூ.900 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  கையெழுத்தாகி […]

செய்திகள்

தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ஆய்வகம் அமைப்பதற்காக கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:- அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டு ஒப்பந்தம் முடிவாகி உள்ளது.  இதனால், தமிழகத்தில் மாணவ, மாணவியருக்கு கூகுள் உதவியுடன் ஏ.ஐ. தொழில் நுட்பம் பற்றிய பயிற்சி வழங்கப்படும்.  தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ஆய்வகம் அமைப்பதற்காக கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தினால், […]

செய்திகள்

பழுதுபார்க்க தூக்கிச் சென்றபோது விபத்து: நடுவானில் கயிறு அறுந்து ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது

உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் அருகே மலைப்பகுதியில் உள்ள இறங்குதளத்தில் கடந்த மே மாதம் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.அந்த ஹெலிகாப்டரை பழுதுபார்ப்பதற்காக கச்சார் விமான தளத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. இதையடுத்து, இந்திய ராணுவத்திற்கு சொந்தமான எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர் மூலம், பழுதடைந்த அந்த ஹெலிகாப்டர் கயிறு கட்டி தூக்கிச் செல்லப்பட்டது.இந்த நிலையில், காற்றின் வேகம் காரணமாக புறப்பட்ட சிறிது நேரத்தில் எம்.ஐ.-17 ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியது. […]

சினிமா

பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக பெரிய நடிகர்களும் குரல் கொடுக்க வேண்டும்- நடிகை ராதிகா

ஹேமா கமிஷன் அறிக்கையால் மலையாள பட உலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, தமிழ் திரைப்பட நடிகர் சங்க செயலாளர் விஷால் செய்தியாளர்களிடம் பேசுகையில், தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்த நிலையில், “தமிழ் சினிமாவில் பிரபல பாடகி ஒருவர் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் குறித்து குற்றச்சாட்டு கூறினார். அவரிடம் ஏன் இத்தனை நாட்கள் கழித்து […]

செய்திகள்

முதலீட்டுக்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு; மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோ நகரில்  நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;-தெற்கு ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மனித வளங்கள் மற்றும் திறன்களை முன்வைத்து வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் உயர்கல்வியில் 48% மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர்.இந்தியாவிலேயே வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியாவிலேயே […]

செய்திகள்

சத்ரபதி சிவாஜி சிலை சேதம்: பிரதமர் மோடி மன்னிப்புக்கேட்டார்

மராட்டிய மாநிலம் சிந்துதுர்க் மாவட்டம், மால்வான் கடற்கரை ராஜ்காட் கோட்டையில் நிறுவப்பட்ட 35 அடி உயர பிரமாண்ட சத்ரபதி சிவாஜி சிலையை பிரதமர் நரேந்திர மோடி கடற்படை தினத்தையொட்டி கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி திறந்துவைத்தார். கம்பீரமாக காட்சியளித்த இந்த சிலை திறந்து வைக்கப்பட்ட 9 மாதங்களில் இடிந்து விழுந்தது. கடந்த 26ம் தேதி சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையின்போது சிவாஜி சிலை இடிந்து விழுந்தது. பிரதமர் மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை உடைந்து […]

செய்திகள்

அண்ணாமலை வெளிநாடு சென்றதால் கட்சி பணிகளை கவனிக்க எச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு

அரசியலுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்து விட்டு, அண்ணாமலை லண்டனில் படிக்க சென்று உள்ளார். லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்துள்ளது. இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப் பட்டுள்ள 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர். அங்கு தங்கி படிப்பவர்களுக்கான செலவை பல்கலைக்கழகமே ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்காக அண்ணாமலை லண்டன் சென்றுள்ளார். 3 மாதங்கள் லண்டனில் தங்கி படிக்கும் அண்ணாமலை, நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து […]

தூத்துக்குடி

தூத்துக்குடி துப்பாக்கிசூடு: அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு விசாரணை 2

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், இந்த சம்பவத்துக்கு காரணமான 17 காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மீது குற்றவியல் ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. மேலும், பாதி்க்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை அதிகரித்து வழங்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்திருந்தது. அந்த ஆணையத்தின் அறிக்கையை ஏற்ற தமிழக அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுப்பது என்றும், […]