• November 1, 2024

சத்ரபதி சிவாஜி சிலை சேதம்: பிரதமர் மோடி மன்னிப்புக்கேட்டார்

 சத்ரபதி சிவாஜி சிலை சேதம்: பிரதமர் மோடி மன்னிப்புக்கேட்டார்

மராட்டிய மாநிலம் சிந்துதுர்க் மாவட்டம், மால்வான் கடற்கரை ராஜ்காட் கோட்டையில் நிறுவப்பட்ட 35 அடி உயர பிரமாண்ட சத்ரபதி சிவாஜி சிலையை பிரதமர் நரேந்திர மோடி கடற்படை தினத்தையொட்டி கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி திறந்துவைத்தார்.

கம்பீரமாக காட்சியளித்த இந்த சிலை திறந்து வைக்கப்பட்ட 9 மாதங்களில் இடிந்து விழுந்தது. கடந்த 26ம் தேதி சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையின்போது சிவாஜி சிலை இடிந்து விழுந்தது.

பிரதமர் மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை உடைந்து கிடந்த காட்சி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இச்சம்பவம் மராட்டிய அரசியலில் புயலை கிளப்பியது.

இந்த விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் மராட்டியத்தில் பாஜக அரசில் ஊழல் அதிகரித்து விட்டதாக குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், மராட்டிய மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி பால்கர் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பால்கரில் சுமார் ரூ.76 ஆயிரம் கோடி மதிப்புள்ள வாதவான் துறைமுக திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார்
அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, சத்ரபதி சிவாஜி சிலை சேதமடைந்ததற்கு மன்னிப்புக்கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நமது மதிப்புகள் மாறுபட்டவை. எங்களை பொறுத்தவரை கடவுளைவிட பெரியது எதுவுமல்ல. சிலர் சாவர்க்கரை தொடர்ந்து அவமதித்து வந்தனர். ஆனால், அவமதித்ததற்கு மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை.
சத்ரபதி சிவாஜி என்பது வெறும் பெயர் மட்டுமல்ல. மால்வானில் நடந்த சம்பவம் தொடர்பாக (சிவாஜி சிலை சேதம்) எனது கடவுள் சத்ரபதி சிவாஜியிடம் தலைவணங்கி மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன். சிவாஜி சிலை சேதமடைந்த சம்பவத்தால் வேதனையடைந்துள்ள மக்களிடம் நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *