Month: December 2023

கோவில்பட்டி

சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சார்பில் 1000 அரிசி பைகள் நிவாரண உதவி 

தென் மாவட்டத்தில் கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக  நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம்  சார்பாக 1000 அரிசி பைகள் வழங்கப்பட்டுள்ளன.  கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி முன்னிலையில் அமைச்சர் கீதா ஜீவன்  மூலமாக வழங்கப்பட்டது. நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க  தலைவர் எம் பரமசிவம்,  செயலாளர் வி. எஸ். சேதுரத்தினம், துணைத் தலைவர்கள் ஆர். கோபால்சாமி, ஆர். வரதராஜன் பெருமாள் பட்டி மாரியப்பன், எம். சின்ன கொம்பையா, ஜி‌‌. கிருஷ்ணமூர்த்தி […]

செய்திகள்

நிலுவையில் உள்ள மசோதாக்கள்: உச்சநீதிமன்ற யோசனைப்படி கவர்னர் ரவி -முதல் அமைச்சர் ஸ்டாலின்

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக கூறி தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் இருவரும் அமர்ந்து பேசலாமே? என யோசனை வழங்கியது. இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, நிலுவையில் உள்ள 10 மசோதாக்கள் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி நிகழ்ச்சியில் டி.ராஜேந்தருக்கு திடீர் மயக்கம்

தூத்துக்குடியில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அகில இந்திய சிம்பு தலைமை ரசிகர் நற்பணி மன்றம் மற்றும் டி.ராஜேந்தர் நற்பணி மன்றம் சார்பில் வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி சிவந்தாகுளம் பகுதியில் இன்று நடைபெற்றது. நடிகர் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு, வெள்ளத்தில் பாதித்த  மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்த மன்ற நிர்வாகிகள் அவரை ஆசுவாசப்படுத்தினர். சிறிது நேரத்தில் சகஜ நிலைக்கு திரும்பினார். இதனால் சிறிது நேரம் பதற்றம் […]

கோவில்பட்டி

காங்கிரஸ் இலக்கிய அணி  நிர்வாகிகள் கூட்டம்

தமிழ் நாடு காங்கிரஸ் இலக்கிய அணி சார்பில் வருடாந்திர மாநில, மாவட்ட நிர்வாகிகள் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் பி.எஸ்.புத்தன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி நகர தலைவர் கே.டி.பி. அருண்பாண்டியன், கமிட்டி  உறுப்பினர் திருப்பதிராஜா முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் முத்து வரவேற்று பேசினார் கூட்டத்தில் தமிழ்நாடு பொது செயலாளர் அனுசுயாதேவி, ஆலடி சங்கர் ஐயா, சிங்கதர்மன், எஸ்.ஆர்.பால்துரை, மாவட்ட செயலாளர் துரைராஜ், மாநில செயலாளர் காளிதாஸ்,ஐ.என்.டி.யு.சி. ராஜசேகரன்,மாவட்ட பொருளாளர் காமராஜ்,கண்ணாயிரம் முத்து, […]

தூத்துக்குடி

நெல்லை, தூத்துக்குடி வெள்ள பாதிப்பு: நடிகர் விஜய் நிவாரண உதவி வழங்கினார்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரண தொகை அறிவித்து வழங்கி வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில்  நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார். இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானத்தில் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள கே.டி.சி.நகர் தனியார் திருமண […]

செய்திகள்

25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி முன்னாள் மாணவர்கள்

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவர் கலை கல்லூரியில் 1993ம் ஆண்டு முதல் 2003 ம் ஆண்டு வரை பயின்ற வணிகவியல், வரலாறு மற்றும் தமிழ் துறைகளை சேர்ந்த முன்னாள் மாணவர்களின் முதலாம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி தென்காசி அருகே ஆயிரப்பேரி – பழைய குற்றாலம் சாலையில் உள்ள பன்லேண்ட் ரிசார்ட்ஸ் அரங்கில் நடைபெற்றது. நாகாலாந்து, மும்பை உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வரும் 80க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் இந்த சந்திப்பில் கலந்து […]

தூத்துக்குடி

TNPSC பயிற்சி வகுப்புகள் 2-ந்தேதி முதல் நடைபெறும்; தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சையது முகமது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு காரணமாக தூத்துக்குடி  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்ட TNPSC பயிற்சி வகுப்புகள் மற்றும் தன்னார்வ பயிலும் வட்ட  நூலகத்திற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. தற்போது நிலைமை சீரடைந்ததால்  தன்னார்வ பயிலும் வட்ட TNPSC பயிற்சி வகுப்புகள் 2.1.2024 முதல் நடைபெறும். தன்னார்வ பயிலும் வட்ட நூலகமும் 2.1.24 முதல் செயல்பட தொடங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் […]

கோவில்பட்டி

எட்டயபுரம் பகுதியில் மழையால் 108 வீடுகள் பாதிப்பு: அரசின் நிவாரண உதவியை மார்கண்டேயன்

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி, எட்டயபுரம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழையால் சேதம் அடைந்துள்ள  வீட்டின் உரிமையாளர்கள் 108- நபர்களுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ள தலா 10,000- ரூபாயை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் இன்று வழங்கினார். எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில்  நடந்த நிகழ்ச்சியின் போது இந்த தொகை வழங்கப்பட்டது. மேலும் மழையால் சேதம் அடைந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு நிவாரண பொருட்களையும்  ஜி.வி.மார்கண்டேயன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்  எட்டயபுரம் வட்டாட்சியர்  மல்லிகா, பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், கோவில்பட்டி […]

செய்திகள்

கோயம்பேடு தே.மு.தி.க. கட்சி அலுவலக வளாகத்தில், அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம்

தொண்டர்களால் அன்புடன் கேப்டன் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் நேற்று காலை மரணம் அடைந்தார்.அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அங்கு கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். அரசியல் கட்சி தலைவர்கள் சினிமா நடிகர், நடிகைகள் என பல்வேறு தரப்பினர் குவியத்தொடங்கினார்கள். இதனால் கோயம்பேடு பகுதி ஸ்தம்பித்தது. கூட்டம் அதிகரித்துகொண்டே  போனதால் இன்று காலை அங்கிருந்து தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடல் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பிற்பகல் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் வெள்ள நீர் அகற்றும் பணி: 3 அமைச்சர்கள் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல் பாதிப்பாக அமைந்தது. கடந்த காலங்களில் பெய்த மழையில் பாதிக்காத பகுதியில் கூட இந்த மழை பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. சில பகுதிகளில் குடியிருப்பின் […]