அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பாலியல் வன்முறை முதல், கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் கடத்தல் வரை உலகில் உள்ள அனைத்து சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருபவர்கள் ஆளும் திமுகவினர் என்பது, அண்மையில் வெளிவரும் செய்திகள் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. குற்றவாளிகளின் கூடாரமாகத் திகழும் திமுகவினர், தங்கள் மீதான களங்கத்தை மறைக்க அதிமுக மீது பழிபோட்டு, நடந்த பிரச்சினையை திசை திருப்புவது வாடிக்கையாகிவிட்டது. டோல்கேட்டில் பணம் செலுத்தாமல் […]
பேரறிஞர் அண்ணா நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது .இதையொட்டி கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள தமிழரசன் படிப்பகத்தில் நகர திமுக சார்பில் நகர்மன்ற தலைவர்,நகரச் செயலாளர் கருணாநிதி தலைமையில் .அண்ணா திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் முனியசாமி,பொதுக்குழு உறுப்பினர் ராமர்,மாவட்டத் துணைச் செயலாளர் ஏஞ்சலா,மாவட்ட பிரதிநிதிகள் ரவீந்திரன்,மாரிச்சாமி,மகளிர் தொண்டரணி இந்துமதி,நகரத் துணைச் செயலாளர் அன்பழகன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு மகேந்திரன்,நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். […]
குலசேகரப்பட்டினத்தில் இருந்து 2 ஆண்டுகளில் ராக்கெட் விண்ணில் ஏவப்படும்; `இஸ்ரோ’ தலைவர் நாராயணன்
இந்திய விண்வெளி ஆய்வு நிரோனம் (இஸ்ரோ) தலைவராக பொறுப்பேற்ற நாராயணன் தனது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த அவருக்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. சக இஸ்ரோ அதிகாரிகள், அலுவலர்களும் நாராயணனை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் நாராயணன் செய்தியாளர்களிடம்கூறியதாவது:- 1947 இல் சுதந்திரம் அடைந்த பிறகு சாதாரண நாடாக இருந்த இந்தியா தற்போது பெரிய அளவில் முன்னேறி உள்ளது. நம் நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து வடக்கு மாவட்ட செயலாளர்,சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு புதுரோட்டில் உள்ள அண்ணா திருவருவுச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் எம்எல்ஏ மோகன்,பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் விஜயபாண்டியன்,ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, அன்புராஜ், அழகர்சாமி, செல்வக்குமார்,தலைமைக் கழக பேச்சாளர் மூர்த்தி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், கலைப்பிரிவு மாவட்டச் […]
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. விடாமுயற்சி திரைப்படம் பிரேக்டவுன் என்கிற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கே ரிலீஸ் ஆக இருந்த இப்படம் சில காரணங்களால் வரும் 6ந் தேதிக்கு தள்ளிப்போனது. படத்தின் […]
1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஹஞானசக்திதரர்’ திருக்கோலமாகும். 2.கந்தசாமி : இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது. 3. ஆறுமுக தேவசேனாபதி : இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது. 4. சுப்பிரமணியர் : இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை […]