விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-… காவல்துறை மானியத்தில் முதல்-அமைச்சர் ஆற்றிய பதிலுரையின்போது, திமுக தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான தளபதி ஸ்டாலினைக் கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முதல்-அமைச்சர் தரப்பில் ‘அது உள்நோக்கம் கொண்டதல்ல’ என்று விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. எனினும், இதுபோன்ற ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதையும் மனித மாண்புகளுக்கு எதிரானது என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம். எந்தவொரு சூழலிலும் […]
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், சி.எம்.டி. அனுமதி உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளிடம் 100 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாக எழுந்த புகாரில், தனியார் பள்ளிகள் சங்க தலைவர் அரசகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அரசகுமார் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், தனியார் […]
மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி இடைத்தேர்தல். அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்கியது,. இடைத்தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. த.வெ.க. ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே நடைபெற உள்ள இடைத்தேர்தல் என்பதால் ஆட்சியையும், அவர்களின் கொள்கை கோட்பாடுகளையும் அவர்கள் எவ்வாறு செயல்படுத்துகின்றனர் என்பதை மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதை நிரூபிக்கும் களமாக பார்க்கப்படுகிறது. இதனால், இந்த இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்றாக […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பெ.சண்முகம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. ”இடைத்தேர்தல், உள்ளாட்சித்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேச தவெகவினர் எங்களை அழைத்தனர். புதிய கூட்டணியை உருவாக்க வேண்டுமென தவெக தரப்பில் கூறப்பட்டது. தவெக ஆதரவு கட்சிகள் கூட்டத்தில் சிபிஎம் பங்கேற்காது. மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்குவோம். காவல்துறை மாணியக்கோரிக்கை பதிலுரையில் முதல்-அமைச்சர் சம்பந்தமில்லாமல் பேசியுள்ளார். எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளில் ஒரு கேள்விக்கு கூட முதல்-அமைச்சர் […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க கோவில்பட்டி கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஓய்வூதியர் சங்க வட்டத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். வட்ட துணைத் தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் சின்னதம்பி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். வட்ட துணைத் தலைவர் மகேஸ்வரன், அரசு ஊழியர் சங்க நிர்வாகி ஹரிபாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வட்ட இணைச் செயலாளர் ஜோதிபாஸ் உள்ளிட்ட […]
கோவில்பட்டி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உலக தமிழ் சங்கம் சார்பில் 204-வது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு உலக தமிழ் சங்க நிறுவனத் தலைவர் வி.ஜி. சந்தோசம் தலைமை தாங்கினார். மேலும் பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் அரங்கம் முன்பு அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திருவள்ளுவரின் சிறப்புகள் குறித்து பேசினார். முன்னதாக பள்ளி தாளாளர் அருள்ராஜ் பீட அர்ச்சிப்பு செய்தார். […]
கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ஒரே நாளில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 332 மெட்ரிக் டன் (ஒரு டன் என்பது ஆயிரம் கிலோ) சரக்குகளைக் கையாண்டு வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. இதற்கு முன்பு ஒரே நாளில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 631 மெட்ரிக் டன் கையாண்டதே சாதனையாக இருந்தது. இதில் நிலக்கரி 62 ஆயிரத்து 466 டன், அனல்மின் நிலக்கரி 49 ஆயிரத்து 67 டன், சுண்ணாம்புக்கல் 20 ஆயிரத்து […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய் பதிலுரை வழங்கினார். ஆனால் சட்டம் ஒழுங்கு, காவல்துறை உள்ளிட்ட உறுப்பினர்கள் எழுப்பிய எந்த கேள்விக்கும் இந்த ‘பதிலுரையில்’ எந்த பதிலும் இடம் பெறவில்லை. மக்கள் பிரச்சினை பற்றி பேசுவதற்கு பதிலாக முழுக்க முழுக்க எதிர்க்கட்சியை குறிவைத்து அடுக்கிய குற்றச்சாட்டுகளே நிரம்பி இருந்தன. மத்திய அரசின் பிடியில் அனைத்து […]
“ஒழுங்கீனமாக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் நின்றால் நடவடிக்கை எடுப்பேன்”-சபாநாயகர் எச்சரிக்கை
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான விவாதத்தில் , திருவெறும்பூர் தவெக எம்.எல்.ஏ. விஜி பேசுகையில், “எனது தொகுதியில் கொடுக்கப்பட்ட பட்டாவுக்கான இடங்கள் கிடையாது. தேர்தலுக்காக போலி பட்டா கொடுத்துள்ளார்கள். வேண்டுமென்றால் ஆய்வு செய்து பாருங்கள்” எனத் தெரிவித்தார். அவரின் பேச்சுக்கு திமுக தரப்பில் எதிர்ப்பு எழுந்த நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களை பார்த்து அனைவரும் உட்காருங்கள், உண்மையைதான் பேசுகிறேன் என்றார். இதனால் டென்ஷன் ஆன பேரவைத் தலைவர் ஜே.சி.டி. […]
சபாநாயகர் முன்பு அமர்ந்து தர்ணா: திமுக எம்.எல்.ஏ.க்களை குண்டுக்கட்டாக வெளியேற்றிய காவலர்கள்
தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியதும், திமுக கொறடா எ.வ.வேலு பேசுகையில், என்னுடைய சட்டமன்ற அனுபத்தில் எத்தனையோ முதல்-அமைச்சர்களை பார்த்துள்ளேன்..! அவர்கள் எல்லாரும் கண்ணியமாக தான் பேசினார்கள். நேற்று 26 நிமிடங்கள் அமைதியாக காத்திருந்தோம். ஆனால், நீதிமன்ற விசாரணையில் இருக்கும் வழக்குகள் குறித்து முதல்-அமைச்சர் பேசியிருக்கிறார். பலமுறை இதே மன்றத்தில் பேசப்பட்ட சர்க்காரிய அறிக்கை குறித்தும் அவதூறாக பேசியிருக்கார். முதல்-அமைச்சர் ஆதாரமில்லாமல் பேசி இருக்கிறார். காவல்துறை மானியம் தொடர்பான தகவல் தவிர்த்து, மிசா, […]







