கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:- என் வாழ்க்கையில் இப்படி ஒரு வலி மிகுந்த நேரத்தை சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. மனது முழுக்க வலி.. வலி மட்டும்தான் இருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.. மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துட்டு இருக்காங்க. சி.எம். சார்… பழி வாங்க வேண்டும் […]
ஒரு கட்சியின் தலைவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லாமல் சென்றது இதுவரை பார்த்திராத
சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி இன்று (30/09/2025) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் 41 உயிர்கள் இழந்துள்ளனர்; மேலும் மருத்துவமனையில் பலர் சிகிச்சையில் உள்ளனர். பெற்றோர்கள், குழந்தைகள், அடுத்த தலைமுறை உயிர்களை இழந்துள்ளனர். சின்னச் சின்ன குழந்தைகளின் உயிர்கள் பறிபோய்விட்டன. அந்த குடும்பங்களின் கண்ணீரும் கதறலும் இன்றும் மறக்க முடியாததாக உள்ளது. பத்து நிமிடம் வெளியே சென்று வருகிறேன் […]
கோவில்பட்டி நகரின் மிக முக்கியமான சாலையாக புதுரோடு விளங்குகிறது. ரெயில் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையான புதுரோட்டில் நிறைய வங்கிகள், முக்கிய அலுவலகங்கள், பல்வேறு தொளில்கூடங்கள், கடைகள் உள்ளன. இந்த சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைத்தும் சோடியம் விளக்கு நிறுவவில்லை.; இரவில் இருள் சூழ்ந்து காணப்படும் இந்த புதுரோட்டில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முதல் முச்சந்தி விநாயகர் கோவில் வரை போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர், […]
கோவில்பட்டி ரோட்டரி கிளப் மற்றும் எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி மாணவர்கள் இணைந்து தூய்மை பணி திட்டத்தின் முதற்கட்டமாக கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் துப்புரவு பணி நடைபெற்றது. தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் பழனிக்குமார் அனைவரையும் வரவேற்றார்,முன்னாள் மாவட்ட உதவி ஆளுநர் முத்துசெல்வம் முன்னிலை வைத்தார். ரோட்டரி, இணைச் செயலாளர் ரத்தினகுமார், அருண், உறுப்பினர்கள் கண்ணன், இளங்கோ, பூல்பாண்டி, நடராஜன், ராஜமாணிக்கம், 50 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், நகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள்கலந்து கொண்டனர். பொருளாளர் […]
தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, தனது எக்ஸ் (X) பதிவில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதை சில நிமிடங்களில் நீக்கியிருந்தார். எக்ஸ் பதிவில் ஆதவ் அர்ஜுனா கூறி இருந்ததாவது:- “சாலையில் நடந்து சென்றாலே தடியடி… சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது… இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறிப்போனால், மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சிதான் ஒரே வழி. இளைஞர்களும், ஜென் Z தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ, அதே போல இங்கும் இளைஞர்களின் […]
தூத்துக்குடி மண்டல அளவிலான பள்ளிக்கூடங்களுக்கு இடையேயான ஆக்கி போட்டி கடந்த 3 நாட்களாக கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மற்றும் வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானங்களில் நடைபெற்றது. இப் போட்டியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்ட அணிகள் மற்றும் திருநெல்வேலி விளையாட்டு விடுதி ஆகிய 7 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. லீக் போட்டியில் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி திருநெல்வேலி விளையாட்டு விடுதி, […]
கோவில்பட்டி , கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி தமிழ்த்துறை, இளைஞர் நலச்சங்கம் மற்றும் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கோவில்பட்டி கிளை கிராம முன்னேற்றத் திட்டம் இணைந்து உலக சகோதரத்துவ தினம் கொண்டாடப்பட்டது. தொடக்கத்தில் இளைஞர் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ச.ஜெயகுரும்பன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் மூ.சுப்புலெட்சுமி தலைமை தாங்கி பேசினார். .அதனைத் தாெடர்ந்து கோவில்பட்டி விவேகானந்த கேந்திர பொறுப்பாளர் பரமகுரு, உலக சகோதரத்துவ தினம் பற்றியும் விவேகானந்தரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைப் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். […]
பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி திட்டங்குளத்தில் இலவச பொது மருத்துவம், கண், சிறுநீரக மருத்துவ முகாம் நடந்தது. முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு நாடார் பொதுநல மருத்துவமனை தலைவர் டி.கே.டி.திலகரத்தினம் தலைமை தாங்கினார், வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சரவணகிருஷ்ணன் முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜா, கிழக்கு ஒன்றிய தலைவர் மகாலட்சுமி வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், ஜெயா செல்வராணி, அகஸ்டின் ஜெபகுமார், ஸ்ரீபாலாஜி,முத்து சஹானா, பிரவீன்குமார், […]
மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, நிறுவனத் தலைவர் மூவி சுந்தர் தலைமை தாங்கினார். தென் மண்டல தலைவர் சுரேஷ் பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் மாரீஸ்வரன், ஒன்றிய தலைவர் தில்லை நடராஜன், சங்க நிர்வாகிகள் செல்லப்பாண்டி, சண்முகையாபாண்டியன், செல்வம், மகேந்திரன் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் ஹமான்சூ […]
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக போலீசார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தனர். இந்த எப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளதாவது:- கரூரில் தனது அரசியல் பலத்தை பறைசாற்ற விஜய் திட்டமிட்டு காலதாமதமாக வந்தார். மரங்களிலும், கடை கொட்டகைகளிலும் தொண்டர்கள் ஏறி அமர்ந்தனர். பல இடங்களில் நிபந்தனைகள் மீறப்பட்டன. தவெக நிர்வாகிகள் இதை கண்டு கொள்ளவில்லை. மெயின்ரோடு வழியாக வந்து காலதாமதமாக வந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தி நிபந்தனையை மீறினர். மரக்கிளை முறிந்ததால் கீழே நின்றவர்கள் மீது விழுந்தனர். […]







