வ .உ.சிதம்பரனார் 155-வது பிறந்தநாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
சுதந்திரப் போராட்ட தியாகி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 155-வது பிறந்தநாள் விழா இன்று செப்டம்பர் 5 கொண்டாடப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனாரின் முழு திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டத் திமுக சார்பில், முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்து முன்னணி

வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள உருவ சிலைக்கு இந்து முன்னணி சார்பில் பால்,பன்னீர், சந்தனம்,அபிஷேகம் செய்து மலர் மாலை அணிவித்து சிவ முறைப்படி மரியாதை செய்யப்பட்டது.
சிறப்பு அழைப்பாளர்களாக இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கே. எஸ். ராகவேந்திரா, பி.சிவலிங்கம் இந்து மக்கள் கட்சி செய்தி தொடர்பாளர் எம்.சுடலை மணி சஞ்சய், வேல் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜி.பாலமுருகன் செய்திருந்தார்.







