டயர் வெடித்து கார் கவிழ்ந்தது: 3 பேர் காயம்
கடலூர் மாவட்டம் கோத்தப்பாக்கம் நாத நாயகி நகர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 41). இவர் தனது தந்தை மும்மூர்த்தி, தாய் ருக்குமணி மற்றும் மகள் அமிர்தீஸ்வரி ஆகியோருடன் நேற்று வெள்ளிக்கிழமை திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரை ஏழுமலை ஓட்டினார்.
மதுரை – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள இனாம்மணியாச்சி மேம்பாலம் அருகே வேன் சென்றபோது, எதிர்பாராதவிதமாக வேனின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தூக்கி வீசப்பட்டு தலைகீழாககவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் பயணித்த சிறுமி அமிர்தீஸ்வரி அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி தப்பினார். இருப்பினும், வேனை ஓட்டி வந்த ஏழுமலை, அவரது தந்தை மும்மூர்த்தி மற்றும் தாய் ருக்குமணி ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி மேற்கு போலீசார், விபத்தில் காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.







