கோவில்பட்டியில் 19-ந் தேதி விளையாட்டு காயம் விழிப்புணர்வு நிகழ்ச்சி; பிரபல டாக்டர்கள் பங்கேற்கிறார்கள்
கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் வருகிற 19-ந்தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு விளயாட்டு காயம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது.
வலிமைப் பயிற்சிகள் காயங்களை தடுக்கும் வழிகள் மற்றும் விளையாட்டு காயங்களைத் தடுக்கும் திட்டம், வலிமைக்கான பயிற்சி செயல்திறன் மற்றும் காயங்களைத் தடுத்தல் ஆகிய தலைப்புகளில் கலந்துரையாடல் நடக்கிறது,

டாக்டர்கள் எஸ்.ஆர்.சுந்தரராஜன் (தலைவர் – IAS, TNGA) எஸ். மாரிமுத்து, (செயலாளர் -TNOA), எஸ்.மகேஷ்ராம் (பொருளாளர் – IAS, TNOA) என்,.மணிகண்டன் (முன்னாள் தலைவர் – TNOA) ஆர்,.சுந்தரபாண்டியன் (செயற்குழு உறுப்பினர் – IOA) எஸ்.. தாமோதரன் (செயற்குழு உறுப்பினர்)
ஏ. சுரேஷ் குமார் (தலைவர் – NOC) எஸ் தினேஷ் (செயலாளர் NOC) ஜெ நிர்மல்ராஜா (பொருளாளர்- NOC) ஆகியோர் கலந்துரையாடலில் பங்கேற்கிறார்கள்..
மேலும் ராஜேஷ் (பிசியோதெரபிஸ்ட்) பாக்யஸ்ரீ சாவர்ட் உடற்பயிற்சி ஆர்வலர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் அனைவரும் காழ்ந்துரையாடலில் கேட்கப்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். எந்த வித கட்டணமும் கிடையாது, விளையாட்டு காயம் தொடர்பாக உங்களுக்கு இருக்கும் அத்தனை சந்தேங்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் விளக்கம் பெறலாம் .நாள்பட்ட காயங்களுக்கும் தீர்வு பெறலாம் என்று டாக்டர் தாமோதரன் தெரிவித்தார்.







