சங்கரன்கோவில் அருகே அரசு பஸ் தீப்பிடித்து எரிந்தது; 50 பயணிகள் உயிர் தப்பினர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பஸ் இன்று காலை புறப்பட்டு சென்றது. நெல்லை புதுப்பேட்டையை சேர்ந்த மாரியப்பன் என்பவர் பஸ்சை ஓட்டினார். சுண்டலம்பட்டியைச் சேர்ந்த முருகன் கண்டக்டராக இருந்தார். பஸ் சில்nசுமார் 50 பயணிகள் பயணம் செய்தனர்.
அந்த பஸ் ராஜபாளையம் செல்லும் சாலையில் உள்ள சுண்டலம்பட்டியில் பயணிகளை இறக்கி விட்டு நெல்லை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் முன்பகுதியில் உள்ள என்சினிலிருந்து திடீரென புகை வரத் தொடங்கியது. இதை கவனித்த டிரைவர் மாரியப்பன், உடனடியாக பஸ்சை சாலையோரம் நிறுத்தினார்.

இதற்கிடையே முன்பகுதியில் தீப்பிடிக்கத் தொடங்கியதை கண்டb டிரைவர் மாரியப்பன் பயணிகளை உடனடியாக கீழே இறங்க அறிவுறுத்தினால் இதைத் தொடர்ந்து பயணிகள் அலறி அடித்தபடி பஸ்சிலிருந்து கீழே இறங்கி உயிர் தப்பினார்கள்.
பயணிகள் அனைவரும் கீழே இறங்கிய சில நிமிடங்களிலேயே பஸ் முழுவதும் தீ வேகமாகப் பரவி, பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கரன்கோவில் தீயணைப்புத் துறையினர், கடுமையாக போராடி தீயை அடித்தும் அணைத்தனர். இருப்பினும் பஸ் முற்றிலும் எரிந்து நாசமானது.
சம்பவம் தொடர்பாக சங்கரன்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







