கோவில்பட்டி சீனிவாசன் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் சங்கரநாராயணன் (வயது 58). கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கெங்காலட்சுமி (50). சம்பவத்தன்று சங்கரநாராயணன் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி-கடலையூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென சாலையின் குறுக்கே நாய் பாய்ந்து ஓடியது. இதில் எதிர்பாராத விதமாக அந்த நாய் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் சங்கரநாராயணன் மற்றும் […]
சிவகங்கை மாவட்டம் கும்பங்குடி பாலம் அருகே, இன்று மாலை காரைக்குடி நோக்கி சென்ற அரசுப் பஸ்சும் மதுரை நோக்கி சென்ற அரசுப் பஸ்சும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பெண்கள், ஒரு டிரைவர் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயர […]
கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் முருகன் மனைவி தமிழ்செல்வி (45). இவர் கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் 9 பவுன் நகை அடகு வைத்திருந்தார். நேற்று முன்தினம் தமிழ்செல்வி அந்த வங்கிக்கு சென்று, பணத்தை செலுத்தி அடகு வைத்திருந்த 9 பவுன் நகையை திருப்பினார். பின்னர் அந்த நகை, செல்போன் ஆகியவற்றை தனது கைப்பையில் வைத்து கொண்டு, அதனை மொபட்டின் இருக்கைக்கு அடியில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டினார். தொடர்ந்து தமிழ்செல்வி தனது வீட்டுக்கு […]
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள அம்மா பூமாதேவி ஆலயம் குரு சித்தர் பீடத்தில் மீனாட்சி அம்மாள் அன்னதானம் கூடம் திறப்பு விழா நடைபெற்றது. இதனையொட்டி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜையும் நித்திய பூஜையும் நடைபெற்றது. காலை 7.40மணிக்கு கணபதி பூஜை சங்கல்பம் புன்னியாக வாசனம் கும்ப பூஜை 108 சங்கு பூஜை கணபதி ஹோமம் அம்பாள் முலமந்திர ஹோமம் புர்ணாஷுதி தீபாராதனை நடைபெற்றது. 9.25 மணிக்கு அம்மா பூமாதேவி உற்சவர் […]
கோவில்பட்டி கல்லூரியில் பேராசிரியர்கள், முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஆசிரியர் திறன் மேம்பாட்டு
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் வழிகாட்டுதலின்படி உள்தர மதிப்பீட்டுக் கழகம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தின் சார்பாக பேராசிரியர்கள், முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஒரு நாள் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டது. உள்தர மதிப்பீட்டுக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், வேதியியல் துறை இணைப்பேராசிரியருமான ஆர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் மூ.சுப்புலெட்சுமி அவர்கள் தலைமை தாங்கி பேசினார்.சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குனரும், தாவரவியல் துறைத்தலைவருமான பா. மகேஷ்குமார் வாழ்த்தி பேசினார். கணினி அறிவியல் […]
மழை-புயலால் விமானங்கள் ரத்து: இலங்கையில் தவிக்கும் 150 தமிழர்களை மீட்க மு.க.ஸ்டாலின் நடவடிக்கை
இலங்கையில் பெய்த கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள விமான நிலையத்தில் இருந்து கடந்த 3 நாட்களாக விமானங்கள் இயக்கப்படவில்லை. இதற்கிடையே துபாய், குவைத் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்கு வரவிருந்த சுமார் 300 பேர் கடந்த 27-ந்தேதி இலங்கையின் மத்தளை விமான நிலையம் வந்துள்ளனர். புயல் காரணமாக அங்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஒருநாள் முழுக்க அங்கு தவித்துள்ளனர் . பின்னர் கொழும்பு விமான […]
பாட்டாளி மக்கள் கட்சி கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நெய்வேலியில் நடைபெற்றது. கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில் கூறியதாவது: ;“எனக்கு நடந்த கொடுமை உங்களுக்கெல்லாம் தெரியும். என் உயிரைத்தான் அவர் பறிக்கவில்லை. மீதி எல்லாவற்றையும் பறித்து விட்டார். உரிமையை பறித்தார், நான் சிந்திய வியர்வை வீணாகிப் போய்விட்டது. உரிமையை இனி யாரும் பறிக்க முடியாது. சுப்ரீம் கோர்ட்டுக்கு போனாலும் பறிக்க முடியாது.அன்புமணி எந்த […]
சமூக முன்னேற்றத்திற்காக பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது;
பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் மாநில அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு அரசினால் ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும். பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் […]
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சி மற்றும்போட்டிகள் நேற்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றன, மாநில அளவிலான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் போட்டிகளில் வெற்றிபெற்ற 11 மாணவர்களுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பமைய தலைவர் முனைவர் கோவி.செழியன் விருதுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பமையத்தின் செயல் இயக்குநர் சண்முகசுந்தரம், தேசிய புத்தாக்க நிறுவனத்தின் உதவி ஆராய்ச்சியாளர் மெரின் டயானா, புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது நாளாக தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 556.70 மி.மீ. மழை பெய்துள்ளது. டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் […]







