மாநில அறிவியல் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற 11 மாணவர்களுக்கு விருது
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சி மற்றும்போட்டிகள் நேற்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றன,
மாநில அளவிலான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் போட்டிகளில் வெற்றிபெற்ற 11 மாணவர்களுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பமைய தலைவர் முனைவர் கோவி.செழியன் விருதுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பமையத்தின் செயல் இயக்குநர் சண்முகசுந்தரம், தேசிய புத்தாக்க நிறுவனத்தின் உதவி ஆராய்ச்சியாளர் மெரின் டயானா, புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதின் ஒருங்கிணைப்பாளர் தேவேந்திர திவாரி, நேஷனல் பொறியியல் கல்லூரியின் தாளாளர். கே.ஆர்.அருணாச்சலம், கல்லூரியின் இயக்குனர் சண்முகவேல், கல்லூரி முதல்வர் காளிதாசமுருகவேல், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.








