கோவில்பட்டியில் வ.உ.சி.சிலைக்கு ரோட்டரி சங்கம், த.வெ.க., கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் மரியாதை
Oplus_16908288

நாட்டின் சுதந்திரத்திற்காக ஆங்கிலேய அரசை எதிர்த்து போராடிய கப்பலோட்டிய தமிழன் வ. உ.சிதம்பரனாரின் 155 வது பிறந்த தினம் இன்று செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது
இதையொட்டி கோவில்பட்டி பாரதி நகரில் உள்ள வ உ சி யின் கொள்ளுப்பேத்தி செல்வியின் இல்லத்தில் உள்ள திருவுருவப்படத்திற்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
வ உ சி யின் கொள்ளுப்பேத்தி செல்விக்கு சாகித்ய அகடாமி விருதாளர் சோ.தர்மன் சால்வை அணிவிக்க கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் நினைவு பரிசு மற்றும் புத்தகம் வழங்கி கவுரவித்தார்.

ரோட்டரி மாவட்ட சாலை பாதுகாப்பு பிரிவு தலைவர் முத்துச்செல்வன்,
செயலாளர் ரமேஷ் குமார், உறுப்பினர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கோவில்பட்டி சைவ வேளாளர் சங்கத்தில் உள்ள வ.உ.சியின் திருஉருவ சிலைக்கு ரோட்டரி மாவட்ட கிளப் சர்வீஸ் சேர்மன் விநாயகா ரமேஷ் தலைமையில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்து முருகன், சீனிவாசன், முத்துச்செல்வம், நடராஜன்,மாரியப்பன்,சுப்பிரமணியன் உள்பட பலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.
தமிழக வெற்றி கழகம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் கோவில்பட்டியில் வ உ சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர்.
தமிழக வெற்றி கழக வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பி. தங்கமணி உட்பட பலர் மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு

சுதந்திர போராட்ட தியாகி வ உ சிதம்பரனார் 155வது பிறந்தநாளை முன்னிட்டு, அன்னாரது உருவச் சிலைக்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் கா. தமிழரசன், செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, பகத்சிங் ரத்ததானக் கழகம் மா. காளிதாஸ், லட்சுமணன், வேல்முருகன், இந்திய தேசிய காங்கிரஸ் துரைராஜ், பழனிச்சாமி, மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துக்குமார், ஜெகன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் ராமலட்சுமி, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு மேரி ஷீலா, கோவில்பட்டி பசுமை தூய்மை இயக்கம் எழுத்தாளர் சுரேஷ்குமார், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் தவம், பாலாஜி, மோகன், திராவிடர் கழகம் செண்பகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.







