தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாநிலக் காவல்துறை தலைவர் நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு, மிகவும் தெளிவான விதிமுறைகளை வகுத்துள்ளது. டிஜிபி பொறுப்பில் இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதம் முன்பாகவே, அடுத்த டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறது. சங்கர் ஜிவாலைக் காவல்துறை தலைவராக நியமிக்கும்போதே, அவர் ஓய்வு பெறும் தினமும் தமிழக அரசுக்கும் தெரியும். ஆனால், தமிழகத்தில் அத்தனை உயர் அதிகாரிகள் பதவியையும், […]
தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணியாற்றும் சங்கர் ஜிவால், தமிழக போலீஸ் வீட்டுவசதி துறை டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் ஆகிய இருவரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஓய்வு பெற்றனர். இதையொட்டி அவர்கள் 2 பேருக்கும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் வழியனுப்பு விழா நடைபெற்றது. சங்கர் ஜிவால், டி.ஜி.பி. பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தமிழக போலீஸ்துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பணியை பாராட்டும் விதமாக அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக […]
மதுரை செல்லூரில் வசித்து வந்த ரூபன்ராஜ் – பிரியதர்ஷினி தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது மணமகன் வீட்டார் வரதட்சணையாக 300 பவுன் நகை கேட்ட நிலையில், பெண் வீட்டார் 150 பவுன் கொடுத்தனர். இந்த நிலையில் மேலும் 150 பவுன் நகை தர வேண்டும் என்று கேட்டு மணமகன் வீட்டார் பிரியதர்ஷினியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் ரூபன்ராஜ் – பிரியதர்ஷினி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று […]
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பனைவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி மனைவி ஜெபக்கனி (55 வயது). இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரில் நடந்த கோவில் திருவிழாவுக்காக குடும்பத்துடன் வந்திருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவில் ஜெபக்கனி காற்றோட்டத்துக்காக வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கியதாக கூறப்படுகிறது. இதனை நோட்டமிட்ட மர்மநபர் நைசாக வீட்டுக்குள் புகுந்து, ஜெபக்கனி கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். […]
மத்திய அரசு கல்வித்தொகையை வழங்காததை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சசிகாந்த் செந்தில் எம்.பி. எம்.பி. உண்ணாவிரத போராட்டத்திலும் கணினி மூலம் அலுவல்களை கவனித்தார். அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில செய்தி தொடர்பு துறை தலைவர் கோபண்ணா, பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் மற்றும் திரளான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு […]
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-தனியார் ஆங்கில செய்தித்தாள் சார்பில் இந்தியாவில் 10 மக்களவைத் தொகுதிகளுக்கும் கூடுதலாக உள்ள மாநிலங்களை ஆளும் முதல்-அமைச்சர்களில் சிறப்பாக செயல்படுபவர் யார்? என்பதை அறிவதற்காக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் அசாம் முதல்-மந்திரி ஹேமந்த் பிஸ்வா சர்மா முதலிடத்தையும், சத்தீஷ்கார் முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய் இரண்டாவது இடத்தையும், உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். மொத்தம் 10 முதல்-அமைச்சர்களைக் கொண்ட பட்டியலில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு […]
ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை இனி கிடையாது என்று விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் உரிய தேதியில் ஓய்வுபெற அனுமதிக்கப்படுவார்கள். குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை முடிவடைந்தபிறகே பணப் பலன்களைப் பெற முடியும். இதுவரை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுவதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசு ஊழியர்களை […]
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் மாவட்டம் முழுவதும் அஸ்ட்ரோ கிளப்புகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் பள்ளி கல்லூரி மாணவர்கள் பொது மக்களிடம் வானவியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை பரப்புரை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நிழல் இல்லா நாள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.நிழல் இல்லா நாள் என்பது அரிய வான் நிகழ்வாகும்.நண்பகலில் சூரியன் நேரடியாக தலைக்கு மேல் இருக்கும் போது வருடத்திற்கு இரண்டு முறை நிகழும் நிகழ்வாகும். 23.5டிகிரி வடக்கு அட்சரேகைக்கும் 23.5டிகிரி […]
மறைந்த த.மா.கா. நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி, சென்னை தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மூப்பனார் மகனும், த.மா.கா. தலைவருமான ஜி.கே.வாசன் தற்போது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வருவதால், கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, ஜி.கே.மூப்பனாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில், பா.ஜ.க. தரப்பில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் […]
வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் ஆசிரியர்கள் கோபத்தில் உள்ளனர்; ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் மயில், கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- திமுக ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சொல்லப்பட்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. இதற்காக நாங்கள் தனிச்சங்கமாகவும், கூட்டச் சங்கங்களுடன் இணைந்து போரட்டங்களை நடத்தி வருகிறோம். பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை […]







