கோவில்பட்டியில் செய்தித்தாள் விநியோகிப்பவர்களுக்கு இலவச மழை கோட்

நாடு முழுவதும் செப்டம்பர் 4ம் தேதி செய்தித்தாள் விநியோகிப்பவர்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்ட பல்வேறு விஞ்ஞானிகள் செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்த்து அதன் மூலம் உயர் கல்வி கற்று உயர் பதவிகளை அடைந்துள்ளனர்.
செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர்களை ஊக்கப்படுத்தும்
விதமாக நாடு முழுவதும் செப்டம்பர் 4ம் தேதி பேப்பர் பாய் தினம் கொண்டாடப்படுகிறது.
கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்திதாள்களை இல்லங்களில் கொண்டு சேர்ப்பவர்களை பாராட்டி சால்வை அணிவித்து எதிர்வரும் பருவ மழையை முன்னிட்டு மழை கோட் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சி கோவில்பட்டி இளையரசனேந்தல் காலையில் உள்ள மாடர்ன் ஹார்டுவேர் நிறுவன அலுவலகத்தில் நடைபெற்றது. கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் ரமேஷ் குமார் வரவேற்று பேசினார்.
ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர்கள் சீனிவாசன், முத்து செல்வம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தினசரி செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர்களுக்கு சால்வை அணிவித்து மழை கோட் மற்றும் புத்தகங்கள் வழங்கி பாராட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க உறுப்பினர் மாரியப்பன் உள்பட செய்தித்தாள்களை விநியோகிப்பவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் செய்தித்தாள் விநியோகிப்பாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.







