• April 27, 2024

Month: May 2023

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பலத்த காற்றுடன் கன மழை

கோவில்பட்டியில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் இன்று வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் மாலை 5 மணி அளவில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய தொடங்கியது.கோவில்பட்டி மட்டுமின்றி அப்பனேரி, அய்யனேரி, இனாம் மணியாச்சி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலும் கன மழை பெய்தது. கோவில்பட்டி நகர் பகுதியில் புதுரோடு இறக்கம் -மெயின் ரோடு மற்றும் இளையரசனேந்தல் சாலை ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்புறம் தண்ணீர் தேங்கியது.இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமப்படடனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து […]

தூத்துக்குடி

ரூ.1 1/2கோடி வரை கடன் வழங்கும் ‘அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்கள் திட்டம்’;

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மூலம் மாவட்ட தொழில் மையம் சார்பில் ‘அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்கள் திட்டம்’ அறிமுக நிகழ்ச்சி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி, திட்டத்தை அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார். மாவட்ட தொழில் மையம் மேலாளர் அ.சுவர்ணலதா முன்னிலை வகித்தார். மேலும் திட்ட விளக்க உரையாற்றினார்பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் பேசியதாவது:- நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்கு பெரிதும் உதவும் வகையில் […]

கோவில்பட்டி

டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வலியுறுத்தி உடுக்கை அடித்து த. மா. கா.நூதன

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி தமிழகத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை ஒழிக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.ஏ.கனி தலைமையில் நூதன போராட்டம் நடைபெற்றது. தமிழ் மாநில கட்சி கோவில்பட்டி நகர தலைவர் கே.பி.ராஜகோபால், வட்டாரத் தலைவர் கே.பி.அழகர்சாமி, இளைஞரணி மாவட்ட பொதுச் […]

தூத்துக்குடி

சிறுபான்மையினருக்கு ரூ.30 லட்சம் வரை தனி நபர் கடன் ; ஆட்சியர் செந்தில்ராஜ்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது :-தூத்துக்குடி மாவட்டத்தில் கிறித்துவர், இசுலாமியர், சீக்கியர், சமணர், பார்சியர் மற்றும் புத்த மதத்தினர் ஆகிய சிறுபான்மையினருக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தனிநபர்கடன் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரையிலும், கைவினை கலைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன் 15 லட்சம், கல்விக்கடன் 20 லட்சம் முதல் 30லட்சம் வரை குறைந்த வட்டி விகிதத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக […]

கோவில்பட்டி

எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி நடைபயணம்

கோவில்பட்டியில் நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் எழுச்சி நாளை முன்னிட்டு கூட்டமைப்பு சார்பாக எரிபொருள் உபயோகச் சிக்கனத்தை வலியுறுத்தி நடை பயணம் நடத்தப்பட்டது.கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் எதிரில் இருந்து ரெயில் நிலையம் வரை பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு மாநில தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கோவில்பட்டி சங்க தலைவர் விஜி என்ற ராஜா முன்னிலை வைத்தார். கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் நடை பயணத்தை தொடக்கி வைத்தார், பேரணியில் […]

கோவில்பட்டி

100 மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், பேனா; கடம்பூர் ராஜூ வழங்கினார்

கோவில்பட்டி காந்தி நகரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஶ்ரீ அனுக்கை விநாயகர் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ கருப்பசாமி கோவில் வைகாசி கொடை விழா நடைபெற்றது.முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ சுவாமி தரிசனம் செய்தார். அப்பகுதியில் உள்ள 100 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் பேனா உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார்.மேலும் 10ம் வகுப்பு தேர்வில் 454 மார்க் எடுத்த ஏழை மாணவனுக்கு படிப்பு செலவுக்கு ரூ 5700 கல்வி உதவித்தொகையாக வழங்கினார். இவ்விழாவில் அதிமுக பெருநகர செயலாளர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி : கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கோவில்பட்டி காந்தி மண்டப புத்தக கண்காட்சியில் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த பள்ளி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் வண்ணம் தீட்டுதல்,பரதநாட்டியம், சங்க இலக்கிய பாடல்கள், உள்ளிட்ட கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றது.தொடக்க நிகழ்ச்சிக்கு புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமண பெருமாள் தலைமை தாங்கினார்.பாரதி அறக்கட்டளை தலைவர் முத்து முருகன்,வழக்கறிஞர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.புத்தக விற்பனையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக் அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ், சாகித்யஅகாடமி விருது பெற்ற […]

கோவில்பட்டி

கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற நிறுவனர் சங்கரவள்ளி நாயகம் 15வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

வ.உ.சியின் வாழ்க்கை வரலாறும், இலக்கியப் பணிகளும் என்ற தலைப்பில் ஆய்வு செய்தவர் சங்கரவள்ளி நாயகம். அவர் எழுதிய ஆறு நூல்கள் நாட்டுடமையாக்கப் பட்டுள்ளன. நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு திருவள்ளுவர் மன்ற நெறிப்படுத்துனர் தொழிலதிபர் விநாயகா ரமேஷ் தலைமை வகித்தார். புனித ஓம் கல்வி நிறுவனத்தின் தலைவர் லெட்சுமணப்பெருமாள் மற்றும் தொழிலதிபர் பசும்பொன் அறக்கட்டளை நிறுவனர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,மன்றச்செயலாளர் நம்.சீனிவாசன் வரவேற்புரையாற்றினார்,திருவள்ளுவர் மன்றத்தின் தலைவர் பேராசிரியர் கருத்தப்பாண்டி அமரர். சங்கரவள்ளி நாயகத்தின் தமிழ்த்தொண்டினையும், மாணவர்கள் மேம்பாட்டிற்காக ஆற்றிய […]

செய்திகள்

கொடுஞ்செயலை மக்கள் மறக்கவில்லை: செந்தில் பாலாஜிக்கு டி.ஜெயக்குமார் கண்டனம்

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அவரது நண்பர்கள், உறவினர்கள், அமைச்சரின் ஆதரவாளர்கள் இடங்களில் கடந்த 26ம் தேதி முதல் தொடங்கி மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள காளியாபுரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பர் அரவிந்தின் பண்ணை வீடு மற்றும் கிணத்துக்கடவு அருகே பணப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் உறவினருடைய கல்குவாரியில் சோதனை நடைபெற்றது. வருமான வரித்துறையினர் சோதனை குறித்து செய்தியாளர்களிடம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி லக்குமி ஆலை பள்ளி முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுக்கு பிறகு  சந்திப்பு

கோவில்பட்டி  லக்குமி ஆலை மேல்நிலைபள்ளியில் கடந்த 1972 -73ம் ஆண்டு 10 -ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் 50 ஆண்டுக்கு பின்னர் மறு கூடுதல் விழா என்ற பெயரில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  அப்பள்ளி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1972 -73ம் ஆண்டு 10-ம் வகுப்பு பயின்ற 32 மாணவர்கள் 50 ஆண்டுக்கு பின்னர் தங்களது நண்பர்களை சந்தித்து தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் தங்களுக்கு பாடம் எடுத்த […]