கோவில்பட்டியில் பலத்த காற்றுடன் கன மழை

கோவில்பட்டியில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் இன்று வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் மாலை 5 மணி அளவில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய தொடங்கியது.
கோவில்பட்டி மட்டுமின்றி அப்பனேரி, அய்யனேரி, இனாம் மணியாச்சி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலும் கன மழை பெய்தது.

கோவில்பட்டி நகர் பகுதியில் புதுரோடு இறக்கம் -மெயின் ரோடு மற்றும் இளையரசனேந்தல் சாலை ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்புறம் தண்ணீர் தேங்கியது.
இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமப்படடனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது.பின்னர் படிப்படியாக குறைந்தது. மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசியது.
