கோவில்பட்டி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ நலத்திட்ட உறுப்பினர் அட்டை
கோவில்பட்டி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளுக்கான தாட்கோ உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி தலைவர் கா.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட தாட்கோ மேலாளர் ஜெனிசிஸ் சியா, தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய உறுப்பினர் விஜயசங்கர், நகர்நல ஆ. அலுவலர் வசுமதி, துப்புரவு அலுவலர் இளங்கோ மற்றும் துப்புரவு ஆய்வாளர் இரா.ஆரியங்காவு ஆகியோர் முன்னிலை வகித்தனார்
கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி யின் போது 321 தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ நலத்திட்ட உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.இவற்றை நகர்மன்ற தலைவர் கருணாநிதி வழங்கினார்.
தூய்மைப்பணியாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான தொழில் புரிவோருக்கான உதவித்தொகை, நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு தூத்துக்குடி மாவட்ட தாட்கோ மேலாளர்- ஜெனிசிஸ் சியா வழங்கினார்.







