கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு(ஜி.வி.என்.) கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை கல்லூரியின் என். தாமோதரன் நினைவு கலையரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரிச் செயலர், கல்லூரி முதல்வர், இயக்குநர், சிறப்பு விருந்தினர் மற்றும் துறைத் தலைவர்கள் பட்டமளிப்பு விழா அங்கியுடன் பாரம்பரிய மரபுடன் விழா மேடையில் அமர்ந்த பின்பு, தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது,. கல்லூரிச் செயலர் ப. மகேந்திரன் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார்.. கல்லூரியின் முதல்வர் மூ.சுப்புலெட்சுமி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக, திருநெல்வேலி […]
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலகட்டத்தில் 2020 ஜூன் 19-ல் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் உயிரிழந்தனர்…. இந்த சம்பவம் தொடர்பாக, சிபிஐ கொலை வழக்குப் பதிவு செய்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், .. தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகிய 9 பேரை கைது செய்தனர். இந்த […]
தமிழ்நாட்டின் முதல் திருநங்கை கிரிக்கெட் நடுவராக ரித்திகா ஸ்ரீ பொறுப்பேற்று புதிய வரலாறு படைத்துள்ளார். இது கிரிக்கெட்டில் மிகப் பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. அவரது மனஉறுதியால், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ)… மாநில நடுவர் தேர்வு விண்ணப்பங்களில் ‘இதர’ பாலினம் என்ற புதிய பிரிவைச் சேர்த்தது. இது ஆண், பெண் விருப்பங்களுடன் இணைந்து அனைவருக்கும் ஒரு வாய்ப்பை வழங்கியது…. சேலத்தைச் சேர்ந்த திருநங்கை ரித்திகா, 2021 முதல் சேலம், கோயம்புத்தூர் ஆட்டங்களில் நடுவராகப் பணியாற்றுகிறார். ஆர்.முத்துராஜ் என்ற […]
சித்திரை மாதம் பவுர்ணமி நாள் அன்று சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும் இவ்விரண்டு காட்சிகளும் ஒரே நேரத்தில் நிகழும். இந்த நிகழ்வின்போது மாலையில் சூரியன் மேற்கு பகுதியில் உள்ள அரபிக்கடல் பகுதியில் பந்து போன்ற வடிவத்தில் கடலுக்குள் மறையும், அதே நேரம் கிழக்கில் உள்ள வங்கக்கடல் பகுதியில் சந்திரன் […]
சிவகங்கை மாவட்டம், கீழடி பகுதியில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஏற்கனவே 10 கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. இது தமிழர்களின் பாரம்பரியத்தையும், பழங்கால நாகரிகத்தையும், தமிழரின் வீரத்தையும் பறைச்சாற்றும் வகையில் அமைந்துள்ளது. இந்த பொருட்கள் கீழடி அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை தமிழக அரசின் தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. குறிப்பாக, 2014-15- ஆம் ஆண்டுகளில்( […]
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், சாதி மற்றும் மத அடிப்படையிலான பிளவுகள் தேச ஒற்றுமைக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் வகையில், தன்னை “சாதி – மதமற்றவர்” என அறிவித்துச் சான்றிதழ் வழங்கக் கோரி நடிகர் பார்த்திபன் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். முன்னதாக, சோழிங்கநல்லூர் வட்டாட்சியரிடம் அவர் அளித்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படாத நிலையில், கோர்ட்டை நாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி, நடிகர் பார்த்திபனின் கோரிக்கையை ஏற்று, அவருக்கு ஒரு […]
ஒவ்வொரு வருடமும் அனைத்து ரோட்டரி சங்கங்களையும் மாவட்ட ஆளுநர் ஆய்வு செய்து ரோட்டரி சங்கங்கள் சிறப்பாக செயல்பட ஆலோசனை வழங்குவதற்கு மாவட்ட ஆளுநரின் அதிகாரப்பூர்வ வருகை நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் பதிவேடுகள் மற்றும் அறிக்கைகள், சங்க செயல்பாடுகளை மாவட்ட ஆளுநர் தினேஷ் பாபு ஆய்வு செய்தார். அத்துடன் சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, போக்குவரத்து காவல்துறை,போக்குவரத்து கழகம்,மின்சார வாரியம்,உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கினார். […]
தமிழகத்தில் கடந்த 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் தவெக… சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு … ஆதரவு வழங்கியது தவெக. தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு நகங்களில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்…. வரும் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரத்தில் முழு வீச்சில் ஈடுபட்ட விஜய், தற்போது ஆன்மீக பயணம்… […]
மாம்பழ சீசன் மார்ச் இறுதியில் தொடங்கி ஜூலை வரை நீடிக்கும். இந்த ஆண்டு ஏப்ரல் இறுதியில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், வரத்து குறைவாக இருப்பதால் விலை சற்று அதிகமாக உள்ளது. சந்தைகளில் மாம்பழம் விற்பனை சூடுபிடித்துள்ள நிலையில், கடை உரிமையாளர்களுக்கு தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ரசாயனம் மூலம் செயற்கையாக மாம்பழங்களைப் பழுக்க வைத்து விற்பனை செய்யும் கடை உரிமையாளருக்கு 5ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, உணவுப் பாதுகாப்புத் துறை உரிமம் ரத்து செய்யப்படும் […]
கோவில்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்தவர் ஜான் (57). இவரது சொந்த ஊர் மதுரை. கோவில்பட்டி சண்முகா நகரில் தங்கி இருந்து மோட்டார் வாகன உரிமம் பெறுவது, புதுப்பித்தல், டிரைவிங் லைசென்ஸ் பெறுவது தொடர்பான ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் முன்னாள் மத்திய மந்திரியும், கருனாநிதியின் மூத்த மகனுமான மு. க. அழகிரியை திமுகவில் சேர்க்க வலியுறுத்தி கோவில்பட்டி தாமஸ் நகரில் உள்ள 100 அடி உயரமுள்ள தனியார் செல் போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்,. இந்த […]







