அரசு துறைகளில் சிறந்த பணியாளர்களுக்கு ரோட்டரி சங்க விருது
ஒவ்வொரு வருடமும் அனைத்து ரோட்டரி சங்கங்களையும் மாவட்ட ஆளுநர் ஆய்வு செய்து ரோட்டரி சங்கங்கள் சிறப்பாக செயல்பட ஆலோசனை வழங்குவதற்கு மாவட்ட ஆளுநரின் அதிகாரப்பூர்வ வருகை நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் பதிவேடுகள் மற்றும் அறிக்கைகள், சங்க செயல்பாடுகளை மாவட்ட ஆளுநர் தினேஷ் பாபு ஆய்வு செய்தார். அத்துடன் சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, போக்குவரத்து காவல்துறை,போக்குவரத்து கழகம்,மின்சார வாரியம்,உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார், ரோட்டரி மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார்.

ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் சீனிவாசன்,பாபு,முத்துச்செல்வன்,ஆசியா பார்ம்ஸ் பாபு, நாராயணசாமி மற்றும் முன்னாள் தலைவர்கள்,உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் பழனிக்குமார் நன்றி கூறினார்.







