உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். ஏப்ரல் முதல் நாளை முட்டாள்கள் தினம் என்று சொல்கிறோம். கி.பி. 16ம் நூற்றாண்டுவரை ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகளில் ஏப்ரல் 1ம் தேதிதான் புத்தாண்டாகக் கடைபிடிக்கப்பட்டது. அப்போதைய ஜூலியன் காலண்டரில் அப்படித்தான் சொல்லப்பட்டிருந்தது. 1582ம் ஆண்டு பிப்ரவரி 29ம் தேதி புதிய காலண்டரை 13ம் கிரிகோரி என்ற போப் ஆண்டவர் அறிமுகப்படுத்தினார். இதைத்தான் கிரிகோரியன் காலண்டர் […]
கோவில்பட்டி அடுத்த கயத்தாறு அருகே காப்புலிங்கம் பட்டியைச் சேர்ந்தவர் சங்கிலி பாண்டி(வயது 29). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடம்பூரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் சங்கிலி பாண்டி மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் வழக்கம் போல் இன்று காலை 9 மணிக்கு கயத்தாரில் இருந்து புறப்பட்டு கடம்பூரில் உள்ள பெட்ரோல் பங்க் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். கயத்தாறு – கடம்பூர் நெடுஞ்சாலை சத்திரப்பட்டி விலக்கு அருகே சென்றபோது அவர் சென்ற […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவிலில் பங்குனி பெருந்திருவிழா.5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு நாட்கால் நடும் வைபவம் இன்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி, விளா பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. பின்னர் மூலவர் சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி சன்னதி முன்பு நாட்காலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, […]
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி, பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் கருத்துக்களை பல்வேறு நிகழ்வுகள் மூலம் பரப்புரை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 17 முதல் 22 வயதுவரை உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டினை ஜூன் மாதம் கோவையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இளைஞர்கள் வானவியல் குறித்த ஆய்வுக் கட்டுரைகள், போஸ்டர்கள் தயாரிப்பு, குறும்படம் தயாரிப்பு, போட்டோகிராபி, […]
கடந்த 2022-ம் ஆண்டு, கார்த்தியின் நடிப்பில் வெளியான படம் ‘சர்தார்’. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கார்த்தி. இந்த படத்தின் வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. முதலில் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், தற்போது அவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சாம் சி.எஸ் பணிபுரிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கிய கதாபாத்திரங்களில் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் […]
பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ‘சிறகடிக்க ஆசை’ என்ற தொடரில் நடித்து வருபவர் ஸ்ருதி நாராயணன். இந்த தொடரில், வில்லி கதாபாத்திரத்திற்கு தோழியாக இவர் நடித்து வருகிறார். சமீபத்தில், இவரின் ஆபாச வீடியோ என்று ஒன்று சோசியல் மீடியாவில் பரவி வந்த நிலையில், இது உண்மை கிடையாது ஏ.ஐ வீடியோ என ஸ்ருதி விளக்கம் கொடுத்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. […]
மத்ஸ்ய ஜெயந்தி என்பது பகவான் விஷ்ணுவின் முதல் அவதாரமான மத்ஸ்ய அவதாரத்தின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளை வைஷ்ணவ பாரம்பரியத்தை பின்பற்றுவோர் மிகுந்த பக்தியுடன் அனுசரிக்கின்றனர். இந்த நாள் சுக்கில பக்ஷ துவிதியையை (சந்திரபக்ஷத்தின் இரண்டாம் நாள்) முன்னிட்டு கொண்டாடப்படுகிறது. மத்ஸ்ய அவதாரம் – காரணமும் மகத்துவமும் பிரம்மாண்டத்தின் தேவர்களும் அரக்கர்களும் பரந்த கந்தற்ற சமுத்திரத்தில் மூழ்கிக் கிடந்தபோது, பகவான் விஷ்ணு மத்ஸ்ய (மீன்) வடிவில் அவதரித்தார். இந்த அவதாரம் மனு மகரிஷிக்கு வேதங்களை மீட்டெடுத்துக் […]
கோவில்பட்டி கம்மவார் சங்கம் சார்பில் யுகாதி திருவிழா ஆர்த்தி மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு கம்மவார் சங்க தலைவர் ஹரிபாலகன் தலைமை தாங்கினார்.. செயலாளர் வக்கீல் அழகர்சாமி, பொருளாளர் ராதாகிருஷ்ணன்,துணைத் தலைவர்கள் பட்டுராஜன், ஜெனரேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, பொன்னூஸ் நேச்சுரல் புராடக்ட்ஸ் சேர்மன் பொன்னுச்சாமி,தமிழ்நாடு தெலுங்கு சம்மேளனம் மாநில தலைவர் வேங்கடவிஜயன்,மருத்துவர் சீனிவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் பல்வேறு போட்டிகளில் […]
சிவபெருமானை வழிபடுவதற்கு திங்கட்கிழமை மிக உகந்த தினமாகும். சிவபெருமானுக்கு உகந்த நாள், சோமவாரம் ஆகும். திங்கட்கிழமையைத் தான் சோமவாரம் என்று அழைப்பார்கள். சோம என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும். கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சந்திரன், தன் நோய் குணமாக வேண்டி சிவபெருமானை நினைத்து தவம் இருந்தான். சந்திரனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், சந்திரனின் நோயை நீக்கியதுடன், நவகிரகங்களில் ஒருவராக திகழும் வாய்ப்பையும் வழங்கினார். அப்போது சந்திரன், தனது வாரத்தில், மக்கள் விரதம் […]