கோவில்பட்டி கம்மவார் சங்கம் சார்பில் யுகாதி திருவிழா

கோவில்பட்டி கம்மவார் சங்கம் சார்பில் யுகாதி திருவிழா ஆர்த்தி மஹாலில் நடைபெற்றது.
விழாவிற்கு கம்மவார் சங்க தலைவர் ஹரிபாலகன் தலைமை தாங்கினார்.. செயலாளர் வக்கீல் அழகர்சாமி, பொருளாளர் ராதாகிருஷ்ணன்,துணைத் தலைவர்கள் பட்டுராஜன், ஜெனரேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, பொன்னூஸ் நேச்சுரல் புராடக்ட்ஸ் சேர்மன் பொன்னுச்சாமி,தமிழ்நாடு தெலுங்கு சம்மேளனம் மாநில தலைவர் வேங்கடவிஜயன்,மருத்துவர் சீனிவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கதிர்வேல் ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயக ரமேஷ், வழக்கறிஞர்கள் பால்ராஜ், ரெங்கநாயகலு, கம்யூனிஸ்ட் கட்சி சீனிவாசன், பிஜேபி வெங்கடேசன் சென்னகேசவன் மற்றும் கம்மவார் சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியை அழகம்மாள் தொகுத்து வழங்கினார்.வேல்ராஜ் நன்றி கூறினார்
